அஞ்சலிக்கு மாப்பிள்ளை பார்த்தாச்சாம்.. சீக்கிரமே டும்டும்டும்மாம்.. வைரலாய் பரவும் தகவல்!

சென்னை: நடிகை அஞ்சலிக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கற்றது தமிழ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானாவர் நடிகை அஞ்சலி.

முதல் படத்திலேயே ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார் அஞ்சலி. தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார்.

தெலுங்கிலும் முன்னணி

தெலுங்கிலும் முன்னணி

அவரது நடிப்பில் வெளியான அங்காடித்தெரு, எங்கேயும் எப்போதும், கலகலப்பு உள்ளிட்ட படங்கள் வெற்றி பெற்றன. தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்,

எடை குறைந்து..

எடை குறைந்து..

இதேபோல் மலையாளம், கன்னடம் என பல மொழிகளிலும் பிஸியான நடிகையாக வலம் வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகை அஞ்சலி உடல் எடை குறைந்து போய் எலும்பும் தோலுமாய் இருந்த போட்டோக்கள் வெளியானது.

எடையை தேற்றி

எடையை தேற்றி

அதனை பார்த்த ரசிகர்கள் என்ன இப்படி இளைத்து விட்டீர்கள் என பெரும் கவலைப்பட்டனர். தற்போது கொஞ்சம் எடையை தேற்றியுள்ள அஞ்சலி அவ்வப்போது தனது போட்டோக்களையும் வீடியோக்களையும் தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்து வருகிறார்.

தயாரிப்பாளருடன் கிசுகிசு

தயாரிப்பாளருடன் கிசுகிசு

நடிகை அஞ்சலி அவ்வப்போது கிசுகிசுவிலும் அடிபட்டு வருகிறார். தமிழ் சினிமாவில் பிரபல நடிகர் ஒருவருடன் இணைத்து பேசப்பட்ட அஞ்சலி, பின்னர் தெலுங்கு சினிமா தயாரிப்பாளர் ஒருவருடன் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக தகவல் வெளியானது.

விரைவில் திருமணம்?

விரைவில் திருமணம்?

ஆனால் அந்த காதல் தோல்வியில் முடிந்ததாக சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் அஞ்சலி கூறினார். இந்நிலையில் நடிகை அஞ்சலிக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Recommended Video

CHUBBY யாதான் சாதிச்சோம் | REWIND RAJA EP-03 | FILMIBEAT TAMIL
ஹைத்ராபாத்தில் திருமணம்

ஹைத்ராபாத்தில் திருமணம்

34 வயதான அஞ்சலிக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்த்துவிட்டதாகவும், விரைவில் ஹைத்ராபாத்தில் அவருக்கு திருமணம் நடைபெற உள்ளதாகவும் தகவல் பரவி வருகிறது.

அதிகாரப்பூர்வ தகவல்

அதிகாரப்பூர்வ தகவல்

மேலும் திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து விலகி இருக்கப் போவதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்து அஞ்சலி தரப்பில் இருந்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ தகவலும் தெரிவிக்கப்படவில்லை.

More from Filmibeat

Read more about: anjali அஞ்சலி
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X