புத்தாண்டு நாளில் ட்ரீட் கொடுக்கும் விஜய்யின் பீஸ்ட் டீம்? தீயாய் பரவும் தகவல்!
சென்னை: நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் பீஸ்ட் படத்தின் அப்டேட் ஒன்று வரும் புத்தாண்டு நாளில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் படம் பீஸ்ட். இந்தப் படத்தில் பூஜாஹெக்டே, அபர்ணா தாஸ், மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ, யோகி பாபு, ஜான் விஜய், விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
இயக்குநர் செல்வராகவனும் இந்தப் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

கடைசி நாள் படப்பிடிப்பு
சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்து வருகிறது. இந்தப் படம் காதல், காமெடி, ஆக்ஷன் என தயாராகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்தது. விஜய்யுடன் நெல்சன் கடைசி நாள் படப்பிடிப்பில் எடுத்த போட்டோக்கள் வெளியானது.

முதல் சிங்கிள் ட்ராக்
இதனை தொடர்ந்து படத்திற்கான டப்பிங் உட்பட போஸ்ட் புரடெக்ஷன் பணிகள் விரைவில் தொடங்கும் என கூறப்படுகிறது. இந்நிலையில் பீஸ்ட் படம் தொடர்பான அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது வரும் புத்தாண்டு தினத்தில் பீஸ்ட் படக்குழு முதல் சிங்கிள் ட்ராக்கை வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது.

தளபதி 66 படம்
இந்த தகவல் இன்னும் உறுதிப்படுத்தப்படாத நிலையில் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பீஸ்ட் திரைப்படம் அடுத்த ஆண்டு மத்தியில் ரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து நடிகர் விஜய் தனது அடுத்தப்படமான தளபதி 66 படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார்.

அடுத்த ஆண்டு படப்பிடிப்பு
இந்தப் படத்தை தெலுங்கு இயக்குநரான வம்சி பைடிப்பள்ளி இயக்குகிறார். தில் ராஜு இந்தப் படத்தை தயாரிக்கிறார். இந்தப் படத்தின் ப்ரி புரடெக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.
Recommended Video

வெளிநாடு செல்லும் விஜய்?
இதனிடையே அந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் வரை அடுத்த மூன்று மாதங்களுக்கு நடிகர் விஜய் ஓய்வு எடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக நடிகர் விஜய் வெளிநாடு செல்ல திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











