ஹேப்பி நியூஸ்... இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போவது அவர்தானாம்!

சென்னை: இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போவது யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி 60 நாட்களை கடந்துள்ளது. கடந்த சீசன்களை போலவே இந்த சீசனையும் நடிகர் கமல்ஹாசன்தான் தொகுத்து வழங்கி வருகிறார்.

வார இறுதி நாட்களில் ஹவுஸ்மேட்டுகளை சந்திக்கும் நடிகர் கமல்ஹாசன், வாரம் முழுக்க நடந்த சம்பவங்கள் குறித்து விவாதிப்பார். கமல் ஹாசனின் வீக்கெண்ட் நிகழ்ச்சியை பார்ப்பதற்கு என்றே ஒரு பெரும் கூட்டம் உள்ளது.

நீங்கள் செய்யும் சிறு உதவி 12 வயது சிறுவனின் நோய் தீர உதவும்

மருத்துவமனையில் சிகிச்சை

மருத்துவமனையில் சிகிச்சை

இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் கடந்த வாரம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். தனது கதர் பிராண்டை அறிமுகப்படுத்த அமெரிக்கா சென்று திரும்பிய நடிகர் கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் கமல்ஹாசனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

ட்ரோலான ரம்யா கிருஷ்ணன்

ட்ரோலான ரம்யா கிருஷ்ணன்

இதனால் கடந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியை கமலால் தொகுத்து வழங்க முடியாத நிலை ஏற்பட்டது. அவருக்கு பதிலாக நடிகை ரம்யா கிருஷ்ணன் கடந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். ஆனால் அவரால் ரசிகர்களை திருப்திபடுத்த முடியவில்லை. முதல் நாள் எபிசோடுக்கே ட்ரோல் மெட்டீரியல் ஆகிவிட்டார் நடிகை ரம்யா கிருஷ்ணன்.

மருத்துவமனை அறிக்கை

மருத்துவமனை அறிக்கை

ஒரு வாரம் அவரது நிகழ்ச்சியை பார்த்த நெட்டிசன்கள் டோட்டல் சொதப்பல் என விமர்சித்து வந்தனர். மேலும் எப்போது கமல் வருவார் என்றும் கேட்டு வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் நடிகர் கமல்ஹாசன் டிஸ்சார்ஜ் ஆகிவிட்டதாக தகவல் பரவியது. இதையடுத்து அறிக்கை வெளியிட்ட நிர்வாகம், கமல்ஹாசன் லேசான கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார்.

நாளை படப்பிடிப்பு

நாளை படப்பிடிப்பு

தற்போது முழுவதும் குணமடைந்து விட்டார். இருப்பினும் டிசம்பர் 3ஆம் தேதி வரை அவர் ஓய்வெடுக்க வேண்டும் என்று அறிவுறுத்திய மருத்துவமனை நிர்வாகம், 4ஆம் தேதி முதல் அவர் தனது தினசரி பணிகளை தொடரலாம் என தெரிவித்தது. 4ஆம் தேதியான நாளை சனிக்கிழமை என்பதால் பிக்பாஸ் நிகழ்ச்சியின் வார இறுதி நாட்களுக்கான படப்பிடிப்பு நடைபெறும்.

இந்த வாரம் பிக்பாஸ்

இந்த வாரம் பிக்பாஸ்

நாளை முதல் கமல் தனது பணியை தொடரலாம் என்று கூறப்பட்டுள்ளதால் இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல் தொகுத்து வழங்குவாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்நிலையில் இந்த வார பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்குவார் என நம்ப தகுந்த வட்டாராத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. இதனை கேட்ட ரசிகர்கள் ஹேப்பியாகி உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X