கேட்டதுமே கிடைச்சுடுச்சே.. தனுஷுடன் ஜோடி போடப் போகும் விஜய் பட நடிகை.. ஒரே ஹேப்பிதான் போங்க!
சென்னை: நடிகை மாளவிகா மோகனன் தனுஷுடன் இணைந்து D43 படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகை மாளவிகா மோகனன் ரஜினியின் பேட்ட படத்தில் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து விஜயின் மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.
இந்தப் படம் ரிலீஸ்க்கு தயாராக உள்ள நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தள்ளி போகிறது. தற்போது நடிகை மாளவிகா மோகனன் ஹீரோ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

பிறந்தநாள் வாழ்த்து
இந்நிலையில் நடிகை மாளவிகா மோகனன் தனுஷுடன் இணைந்து நடிக்க உள்ளதாக விருப்பம் தெரிவித்திருந்தார். நேற்று முன் தினம் தனுஷின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்தார் மாளவிகா மோகனன்.

நம்புகிறேன்..
வாழ்த்திய கையோடு தனுஷுடன் இணைந்து நடிக்க ஆர்வமாய் இருப்பதாக தெரிவித்திருந்தார். மேலும் விரைவில் யாராவது ஒரு படத்தில் நம்மை ஒன்றாக இணைப்பார்கள் என்று நம்புகிறேன் என பதிவிட்டிருந்தார்.

தனுஷின் டி43
வாழ்த்துக்கு நன்றி தெரிவித்த நடிகர் தனுஷ், லுக்கிங் ஃபார்வர்டு என பதில் அளித்திருந்தார். இந்நிலையில் தனுஷ் நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கும் D43 படத்தில் நடிகை மாளவிகா மோகனனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரசிகர்கள் வாழ்த்து
இதுகுறித்து படக்குழு தரப்பில் இருந்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. இந்த தகவலை அறிந்த ரசிகர்கள், கேட்டவுடனேயே வாய்ப்பு கிடைத்து விட்டதே ஹேப்பி தானே என கேட்டு வாழ்த்து கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











