அடடா.. பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறிய நபர் இவர் தான்.. வெளியான அதிர்ச்சி தகவல்!

சென்னை: பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறிய நபர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. வரும் வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஃபினாலே வாரமாக இருக்கப் போகிறது.

வரும் 17 ஆம் தேதி பிக்பாஸ் நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே கொண்டாடப்படவுள்ளது. இதனால் வரும் வாரம் போட்டிகள் நிறைந்த கடுமையான வாரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது-.

வைல்ட் கார்டு என்ட்ரி

வைல்ட் கார்டு என்ட்ரி

இந்நிலையில் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து யார் வெளியேறப் போகிறார் என்ற தகவல் கசிந்துள்ளது. 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில், அடுத்தடுத்து இரண்டு போட்டியாளர்கள் வைல்ட் கார்ட் என்ட்ரியாக பங்கேற்றனர்.

11 போட்டியாளர்கள்

11 போட்டியாளர்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் வாரத்தில் எவிக்ஷன் புராசஸ் நடைபெறாத நிலையில் அதன் அடுத்த வாரங்களில் இருந்து இதுவரை, ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி, சுசித்ரா, சம்யுக்தா, ரமேஷ், நிஷா, சனம் ஷெட்டி, அர்ச்சனா, அனிதா, ஆஜித் என 11 போட்டியாளர்கள் வெளியேறியுள்ளனர்.

அனைவரும் நாமினேஷன்

அனைவரும் நாமினேஷன்

இந்நிலையில் இந்த வாரம் ஃபினாலே வாரத்திற்கான முதல் வாரம் என்பதால் 7 போட்டியாளர்களுமே எவிக்ஷனுக்கான நாமினேஷன் லிஸ்ட்டில் இடம பிடித்தனர். இதனால் யார் இந்த வாரம் வெளியேறுவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எகிறியது.

ஆரிக்கு அதிகமான வாக்குகள்

ஆரிக்கு அதிகமான வாக்குகள்

இந்நிலையில் இந்த வாரம் வெளியேறவுள்ள போட்டியாளர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ஆரிக்கு அதிகமான வாக்குகள் கிடைத்து முதலிடத்தில் இருப்பதாகவும், ஆரியை அடுத்து இரண்டாவது இடத்தில் பாலாஜி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

ரியோ மற்றும் கேபி

ரியோ மற்றும் கேபி

இருப்பினும் ஆரி மற்றும் பாலாஜி ஆகிய இருவருக்கும் இடையே உள்ள வாக்குகள் வித்தியாசம் அதிகம் என்றும் கூறப்படுகிறது. அவர்களுக்கு அடுத்தப்படியான ரியோ மூன்றாவது இடத்திலும் கேபி நான்காவது இடத்திலும் உள்ளதாக கூறப்படுகிறது.

கடைசி இடத்தில் ஷிவானி

கடைசி இடத்தில் ஷிவானி

சோம் ஃபினாலேவுக்கான டிக்கெட்டை பெற்றிருப்பதால் அவர் நேரடியாக ஃபினாலே வாரத்திற்குள் நுழைந்து விட்டார்.
இந்த வாரம் வாக்கெடுப்பின்படி கடைசி இடத்தில் உள்ளவர் ஷிவானி என்றும் அதனால் அவர் இந்த வாரம் வெளியேற்றப்படவுள்ளதாக காலை முதல் தகவல் வெளியானது.

ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பு

ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பு

அதேநேரத்தில் ஷிவானியை அடுத்து ரம்யாவுக்கு குறைவான வாக்குகள் கிடைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் ஷிவானியை காட்டிலும் ரம்யாவுக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பு அதிகம் இருப்பதால் அவர் வெளியேற்றப்படலாம் என்று கூறப்பட்டது.

இன்று மாலைக்குள்

இன்று மாலைக்குள்

ஆனால் நம்ப தகுந்த வட்டாரத்தில் இருந்து வந்துள்ள தகவலின் படி ஷிவானி வெளியேற்றப்படுவதே உறுதி என்றும் கூறப்பட்டது. ஞாயிற்றுக்கிழமைக்கான எபிசோடும் இன்றே காட்சியாக்கப்பட்ட பிக்பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் வெளியயேறும் நபர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

உறுதியான தகவல்

உறுதியான தகவல்

அதன்படி பிக்பாஸ் வீட்டில் இருந்து கடைசி போட்டியாளராக கேபி சேவ் செய்யப்பட்டதாகவும் அடுத்து அவருக்கும் குறைவான வாக்குகளை பெற்ற ஷிவானி பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டதாகவும் உறுதியாக தகவல் வெளியாகியுள்ளது. நாளைய எபிசோடில் வெளியேறும் நபர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒளிபரப்பப்படும்.

பாலாஜிதான் பாவம்

பாலாஜிதான் பாவம்

ஷிவானி வெளியேற்றப்பட்ட தகவலை அறிந்த ரசிகர்கள் பாலாஜிதான் இனிமோ பாவம், ஷிவானி இல்லாமல் இந்த ஒரு வாரம் எப்படி இருக்கப் போகிறாரோ என கூறி வருகின்றனர். மேலும் நேற்று சிங்கப்பெண்ணே பாடலை போட்டு ஏத்தி விட்டு இன்று வெளியேற்றிவிட்டீர்களே என்றும் சாடி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X