பிக்பாஸ் முதல் சீசனில் வந்தவுடன் ஓட்டம் பிடித்தாரே.. அந்த நடிகருக்கு மீண்டும் வாய்ப்பாம்!
சென்னை: பிக்பாஸ் முதல் சீசனில் பங்கேற்ற இளம் நடிகருக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Recommended Video
பிக்பாஸ் 4 க்கான பணிகள் ஜெட் வேகத்தில் நடைபெற்று வருகின்றன. அக்டோபர் முதல் வாரத்தில் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க போகும் போட்டியாளர்கள் குறித்த தகவல்கள்தான் தற்போது ஹாட் டாப்பிக்காக உள்ளது.

இளம் நடிகர்
நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அது குறித்த தகவல்கள் தொடர்ந்து கசிந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இளம் நடிகர் ஒருவர் பங்கேற்க போவதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

உடல் நலக்குறைவு
அதாவது வழக்கு எண் 18/9 என்ற படத்தில் ஹீரோவாக நடித்தவர் நடிகர் ஸ்ரீ. இவர் பிக்பாஸ் முதல் சீசனில் பங்கேற்றார். ஆனால் திடீரென ஏற்பட்ட உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற நான்காவது நாளே வெளியேறினார்.

மீண்டும் வாய்ப்பு
இருப்பினும் அடுத்தடுத்த சீசன்களில் அவர் பங்கேற்பார் என்று தகவல் கசிந்தது. ஆனால் நடிகர் ஸ்ரீ பங்கேற்க வில்லை. இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் அவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கட்டிப்பிடிக்கள் ஆள் இல்லை
நடிகர் ஸ்ரீ முதல் சீசனில் பங்கேற்றபோது சக போட்டியாளரான ஜூலி, அவரிடம் தான் நெருக்கமாக பழகினார். பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தபோது, எல்லோரும் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து வரவேற்றார்கள். என்னை கட்டிப்பிடிக்க யாருமே இல்லை என்று கூறி புலம்பினார். அந்த புரமோ பெருமளவில் வைரலானது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











