தயாரிப்பாளர் சங்கத்தின் தடை: வெப் சீரிஸில் நடிக்க தயாரான வடிவேலு? கோலிவுட்டில் இப்போ இதான் ஹாட்!

சென்னை: நடிகர் வடிவேலு வெப் சீரிஸில் நடிக்கவுள்ளதாக தகவல வெளியாகியுள்ளது.

நடிகர் வடிவேலு தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகர்களில் ஒருவர். மற்றவர்களை கேலி கிண்டல் செய்யும் நடிகர்கள் மத்தியில் தன்னைத்தானே டேமேஜ் செய்துக் கொண்டு மற்றவர்களை சிரிக்க வைப்பார்.

அவருடைய பாடி லாங்குவெஜை ரசிப்பதற்காகவே அவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமான ரசிகர்களை கொண்டிருக்கிறார் வடிவேலு.

வடிவேலுவுக்கு தடை

வடிவேலுவுக்கு தடை

24 ஆம் புலிகேசி படத்தின் போது படத்தின் ஏற்பட்ட பிரச்சனையால் அதன் தயாரிப்பாளரான இயக்குநர் ஷங்கர் வடிவேல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்தார். இதனை தொடர்ந்து அவரை புதிய படங்களில் ஒப்பந்தம் செய்ய தாயரிப்பாளர் சங்கம் தடை விதித்தது.

தலைவன் இருக்கின்றான்

தலைவன் இருக்கின்றான்

இதனால் கடைசியாக மெர்சல் படத்திற்கு பிறகு அவருக்கு படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. கமலின் தலைவன் இருக்கின்றான் படத்தில் நடிக்க உள்ளார் என தகவல் வெளியானது. இருப்பினும் தயாரிப்பாளர் சங்கம் விதித்துள்ள தடையால், வடிவேலுக்கு சொல்லும்படியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

முழுக்க முழுக்க காமெடி

முழுக்க முழுக்க காமெடி

இந்நிலையில் நடிகர் வடிவேல் வெப் சீரிஸில் நடிக்கவுள்ளதாக தவகவல் வெளியாகியுள்ளது. இதற்காக ஆன்லைன் நிறுவனம் ஒன்றுடன் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. முழுக்க முழுக்க காமெடி தொடராக அந்த வெப் சீரிஸ் உருவாக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Recommended Video

Ponmagal Vandhal Director latest | OTT platform • Surya, Jothika, JJ. Fedrick
உறுதிப்படுத்தவில்லை

உறுதிப்படுத்தவில்லை

இதற்காக வடிவேலுக்கு ஒரு பெரும் தொகை சம்பளமாக வழங்கப்பட இருப்பதாகவும், வெப் சீரிஸில் நடிக்க நடிகர் வடிவேலு ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து சம்பந்தப்பட்ட OTT நிறுவனமோ அல்லது வடிவேல் தரப்போ இதுவரை உறுதிப்படுத்தவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X