மீண்டும் ஹீரோவாக களமிறங்கும் வைகைப்புயல் வடிவேலு.. தீயாய் பரவும் தகவல்!

சென்னை: நடிகர் வடிவேல் மீண்டும் ஹீரோவாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரைத்துறையின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் நடிகர் வடிவேலு. ஏராளமான படங்களில் நகைச்சுவை கதாப்பாத்திரங்களிலும் குணச்சித்திர கதாப்பாத்திரத்திலும் நடித்துள்ளார்.

மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு மிகவும் பிடித்தமான நடிகர் ஆவார். நாள்தோறும் அவரது போட்டோக்களை மீம்கள் வாயிலாக சமூக வலைதளங்களில் காணலாம்.

சூரஜ் இயக்கத்தில்

சூரஜ் இயக்கத்தில்

கடைசியாக விஜயுடன் மெர்சல் படத்தில் நடித்திருந்தார் வடிவேலு. அதன் பிறகு எந்த படத்திலும் நடிகர் வடிவேலு கமிட்டாகவில்லை. இந்நிலையில் நடிகர் வடிவேலு, சூரஜ் இயக்கத்தில் மீண்டும் ஹீரோவாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது,

முதலில் ஹீரோவாக..

முதலில் ஹீரோவாக..

நடிகர் வடிவேலு சிம்பு தேவன் இயக்கிய இம்சை அரசன் 23ஆம் புலிகேசி படத்தில் முதலில் ஹீரோவாக நடித்தார். அதனை தொடர்ந்து இரண்டு மூன்று படங்களில் ஹீரோவாக நடித்தார். வடிவேலு சூரஜ் இயக்கத்தில் வெளியான தலைநகரம், மருதமலை மற்றும் கத்தி சண்டை ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

ஹீரோவாகப் போவதில்லை

ஹீரோவாகப் போவதில்லை

அந்த படங்களில் வடிவேலுவின் காமெடி அட்டகாசமாக இருந்தது. இந்நிலையில் சூரஜ் இயக்கத்தில் வடிவேலு மீண்டும் ஹீரோவாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இனி ஹீரோவாக நடிக்கப் போவதில்லை என வடிவேலு முன்பு ஒரு நேர்க்காணலில் தெரிவித்திருந்தார்.

Recommended Video

Vikram 60 • Combo Treat | Karthick Subburaj • Chiyan Vikram, Dhruv Vikram
மிஷ்கின் இயக்கத்தில்..

மிஷ்கின் இயக்கத்தில்..

இதனிடையே நடிகர் வடிவேலு கமல்ஹாசனின் தலைவன் இருக்கின்றான் படத்தில் முக்கிய ரோலில் நடிக்கவுள்ளார். மேலும் சிம்பு நடிப்பில் மிஷ்கின் இயக்கவுள்ள அடுத்த படத்திலும் நடிகர் வடிவேலு நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.

More from Filmibeat

Read more about: vadivelu வடிவேலு
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X