அப்படி கோபப்பட்டாங்க.. இப்போ இவங்கதாம் முதல் ஆளாம்.. பிக்பாஸ்க்கு செலக்ட் ஆயிட்டாங்களாமே!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பது குறித்து மாற்றி மாற்றி பேசி வந்த நடிகை நிகழ்ச்சியில் பங்கேற்பது உறுதியாகியுள்ளது.
Recommended Video
பிக்பாஸ் நிகழ்ச்சி வரும் அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதற்கான பணிகள் ஜெட் வேகத்தில் நடைபெற்று வருகிறது. குறிப்பாக போட்டியாளர்கள் தேர்வு பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.

கொரோனா சோதனை
இந்த வாரத்தில் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ள டாப் 16 போட்டியாளர்கள் தேர்வு செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது. தேர்வு செய்யப்படும் போட்டியாளர்கள் 15 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு கொரோனா சோதனைக்கு உட்படுத்தப்பட்டு நிகழ்ச்சியில் பங்கேற்க வைக்கப்படுவார்கள் என தெரிகிறது.

பிரபலத்தின் பெயர்
நாட்கள் நெருங்க நெருங்க பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல போகும் அந்த பிரபலங்கள் யார் என்று அறிந்து கொள்ள ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்துள்ளது. அதற்கேற்றார் போலவே நாள் தோறும் ஒரு பிரபலத்தின் பெயர் பிக்பாஸ் போட்டியாளர் என வைரலாகி வருகிறது.

குழப்பம்
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க போகிறாரா இல்லையா என குழப்பத்தை ஏற்படுத்தி வந்த நடிகை அம்ரிதா அய்யர் குறித்து மேலும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது பிகில் படத்தில் தென்றல் என்னற கேரக்டரில் நடித்தவர் அம்ரிதா அய்யர்.

ஏன் என் பெயர்?
ஆரம்பம் முதலே இவரது பெயர் பிக்பாஸ் போட்டியாளர்களின் பட்டியலில் அடிபட்டு வருகிறது. ஆனால் முதலில் என் பெயரை எதற்கு தேவையில்லாமல் இழுக்கிறார்கள் என்று காட்டமாக டிவிட்டினார் நடிகை அம்ரிதா அய்யர்.

உறுதி செய்த ஃபேன்ஸ்
பின்னர் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் சாட் செய்த அம்ரிதா பிக்பாஸில் பங்கேற்க போகிறாரா என்ற கேள்விக்கு பதில் அளித்தார். அப்போது எனக்கு தெரியாது, சஸ்பென்ஸாவே இருக்கட்டும் என தெரிவித்தார். அதனை பார்த்த ரசிகர்கள் அவர் பிக்பாஸில் பங்கேற்க போகிறார் என்பதை உறுதி செய்தனர்.

ரசிகர்கள் மகிழ்ச்சி
இந்நிலையில் நடிகை அம்ரிதா அய்யர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பது உறுதியாகியுள்ளதாக கூறப்படுகிறது. சமூக வலைதளங்களிலும் நடிகை அம்ரிதா அய்யர் பிக்பாஸில் பங்கேற்க போவது உறுதி என தகவல் பரவி வருகிறது. இதனால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











