அடடா.. பிக்பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் வெளியேறியது இவர்தான்.. ஆதாரத்துடன் தீயாய் பரவும் தகவல்!
சென்னை: பிக்பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் வெளியேறிய போட்டியாளர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 4 ஆம் தேதி தொடங்கியது. 105 நாட்கள் நடைபெறவுள்ள பிக்பாஸ் நிகழ்ச்சி நாளையுடன் 2 வாரங்களை நிறைவு செய்கிறது.
வழக்கம்போல வாரத்தின் இறுதி நாட்களில் போட்டியாளர்களை அகம் டிவி வழியே சந்திக்கும் கமல் அவர்களுடன் அந்த வாரம் முழுக்க நடந்த நிகழ்வுகள் குறித்து விவாதிப்பார்.

எவிக்ஷன் இல்லை
இதனை தொடர்ந்து ஞாயிற்றுக் கிழமைகளில் பிக்பாஸ் வீட்டிலிருந்து மக்களின் வாக்குகளின் அடிப்படையில் குறைந்த வாக்குகளை பெற்ற ஒரு போட்டியாளர் வெளியேற்றப்படுவார். கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் வாரம் என்பதால் பிக்பாஸ் வீட்டில் எவிக்ஷன் நடைபெறவில்லை.

எஸ்ஸான சுரேஷ்
ஆனால் கடந்த வாரம் நடைபெற்ற கடந்து வந்த பாதை டாஸ்க்கின் போது 8 போட்டியாளர்கள் நாமினேட் செய்யப்பட்டனர். அவர்களில், சுரேஷ் சக்கரவர்த்தி பிக்பாஸ் வீட்டின் கேப்டன் ஆனதால், அவர் நாமினேஷனில் இருந்து தப்பித்தார்.

எவிக்டானது யார்?
எஞ்சிய 7 போட்டியாளர்களான சனம் ஷெட்டி, சம்யுக்தா, ஷிவானி நாராயணன், கேப்ரியலா, ஆஜித், ரேகா, ரம்யா பாண்டியன் ஆகியோர் நாமினேஷன் லிஸ்ட்டில் இடம்பெற்றனர். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமைக்கான எபிசோடும் சனிக்கிழமை காட்சியாக்கப்படும் என்தால் எவிக்டானவர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

ரேகா வெளியேற்றம்
அதன்படி, பிக்பாஸ் வீட்டில் இருந்து நடிகை ரேகா வெளியேற்றுப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து பிக்பாஸ் வீட்டில் உள்ள சக ஹவுஸ்மேட்ஸ் அவருடைய திங்க்ஸ்களை பேக் செய்யும் பணியில் ஈடுபட்டதாகவும் நம்ப தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

சனம் வாக்குவாதம்
சனம் ஷெட்டியை தான் ரசிகர்கள் திட்டி தீர்த்தனர். சின்ன பிரச்சனையெல்லாம் பேசி பெரிதாக்குகிறார். யார் என்ன சொன்னாலும் வாக்குவாதம் செய்கிறார் என்று கூறிய ரசிகர்கள் அவரை முதலில் வெளியேற்ற வேண்டும் என்று தெரிவித்து வந்தனர்.

சுவாரசியம் இல்லை
இந்நிலையில் நடிகை ரேகா பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். ரேகாவால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் எந்த சுவாரசியமும் இல்லை என்பதால் அவர் வெளியேற்றப்படுவதாக கூறப்படுகிறது.
Recommended Video

ரசிகர்கள் ஏமாற்றம்
ரேகா வந்த உடனே அவர் ரொம்பவே ரூடாக இருக்கிறார் என சக போட்டியாளர்கள் கூறினர். அதன்பிறகு இருக்கும் இடமே தெரியாமல் இருந்து வந்தார் ரேகா. இந்நிலையில் ரேகா பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக வெளியாகியிருக்கும் தகவல் ரசிகர்களை ஏமாற்றமடைய செய்துள்ளது.


Click it and Unblock the Notifications











