மாஸ்டர் படத்தில் ப்ளூப்பர்ஸ்.. அதாங்க தேவையில்லாத ஷுட்டிங் ஸ்பாட் அதகளத்தல்லாம் சேர்க்க போறாங்களாம்!
சென்னை: மாஸ்டர் படத்தில் பளூப்பர்ஸ் எனும் ஷுட்டிங் ஸ்பாட்டில் நிகழ்ந்த சுவாரசிய சம்பவங்கள் சேர்க்கப்பட போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
Recommended Video
லோகோஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் மாஸ்டர்.
கடந்த ஏப்ரல் மாதம் ரிலீஸ் ஆகவேண்டிய இந்த படம் கொரோனா லாக்டவுன் காரணமாக இன்னமும் ரிலீஸ் ஆகாமல் உள்ளது.

பல தகவல்கள்..
இருப்பினும் படம் குறித்த ஏதாவது ஒரு தகவல் அவ்வப்போது வெளியாகி வருகிறது. அந்த வகையில் மாஸ்டர் படத்தில் விஜய் டபுள் ஆக்ஷனில் நடிக்கிறார், மாஸ்டர் படம் ஒரு உண்மை சம்பவம், மாஸ்டர் படத்தில் லோகேஷ் கனகராஜ் கேமியோ அப்பியரன்ஸ் கொடுக்கிறார் என பல தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன.

சொதப்பிய காட்சிகள்
ஆனால் இதுகுறித்த எந்த தகவலும் உறுதிப்படுத்தப்படாத நிலையில் தற்போது மேலும் ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது மாஸ்டர் படத்தில் ப்ளூப்பர்ஸ் எனும் ஷுட்டிங் ஸ்பாட்டில் நிகழ்ந்த சுவாரசிய சம்பவங்கள், காட்சிக்கு அப்பாற்பட்ட சில சீன்கள், சொதப்பிய காட்சிகள் என அனைத்தும் சேர்க்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

ரசிகர்கள் ஆர்வம்
எப்போதுமே படத்தையும் தாண்டி படப்பிடிப்பில் நடக்கும் காட்சிகளை காண ரசிர்கள் மத்தியில் ஆர்வம் அதிகம். ஏற்கனவே பல படங்களில் இதுபோன்ற ப்ளூப்பர்ஸ் காட்சிகள் படத்தின் இறுதியில் சேர்க்கப்பட்டுள்ளது. சுவாரசியமான அந்த காட்சிகளை படம் முடிந்த பிறகும் தியேட்டரில் ஆங்காங்கே நின்றப்படி ரசிகர்கள் பார்ப்பது வழக்கம்.

சுவாரசிய சம்பவங்கள்
அப்படியான சுவாரசிய சம்பவங்களை மாஸ்டர் படத்தில் சேர்க்க உள்ளனர். மாஸ்டர் பட ஷுட்டிங் ஸ்பாட்டில் விஜய் சேதுபதி, நடிகர் விஜய்க்கு முத்தம் கொடுத்த போட்டோ ஏற்கனவே வைரலானது. இந்நிலையில் ப்ளூப்பர்ஸ் சேர்க்கப்பட்டால் அதுபோன்ற பல காட்சிகள் இடம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











