மிரட்டும் டெங்கு.. ரசிகர்களுக்கு ரஜினி போட்ட திடீர் உத்தரவு!
சென்னை: மிரட்டும் டெங்கு காய்ச்சலை தொடர்ந்து ரஜினிகாந்த் தனது ரசிகர்களுக்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.
இதுதொடர்பான ஷுட்டிங் ஸ்பாட் போட்டோக்கள் சமூக வலைதளங்களில் அவ்வப்போது வெளியாகி வைரலாகும். இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.

திரும்பிய ரஜினி
இந்நிலையில் தர்பார் படப்பிடிப்பை முடித்த ரஜினிகாந்த் தனது மகளுடன் இமயமலைக்கு சென்றார். தற்போது இமயமலையில் இருந்து திரும்பியுள்ளார் ரஜினிகாந்த்.

கட்சி அறிவிப்பு
ரஜினிகாந்த் வரும் சட்டசபை தேர்தலில் தனது கட்சி தனித்து நின்று போட்டியிடும் என இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அறிவித்தார். ஆனால் இதுவரை கட்சி குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை.

வரவேண்டிய நேரத்தில்
மாறாக ரஜினியின் 168வது படம் குறித்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. ஆனாலும் தலைவர் வர வேண்டிய நேரத்தில் சரியாக வருவார் என தெரிவித்து வருகின்றனர் ரசிகர்கள்.

நில வேம்பு கஷாயம்
இந்நிலையில் சென்னை திரும்பிய கையோடு மக்களுக்கு நில வேம்பு கஷாயம் விநியோகம் செய்ய வேண்டும் என மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கு ரஜினி உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது. இதனை தொடர்ந்து நில வேம்பு கஷாயம் கொடுக்கும் பணியை தொடங்கியுள்ளனர் ரஜினி ரசிகர்கள்.

தண்ணீர்
சென்னையில் இந்த ஆண்டு ஏற்பட்ட குடிநீர் தட்டுப்பாட்டின் போது ரஜினிமக்கள் மன்றத்தினர் நகரின் பெரும்பாலான பகுதிக்கு குடிநீர் சப்ளை செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications