பிக்பாஸ் வீட்டுக்குள் ரீஎன்ட்ரி ஆகும் சுரேஷ் தாத்தா.. அர்ச்சனாவுக்கும் அனிதாவுக்கும் ஆப்பு ரெடி!
சென்னை: பிக்பாஸ் வீட்டுக்குள் சுரேஷ் சக்கரவர்த்தி மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் ஆரம்பத்திலேயே 16 போட்டியாளர்களில் ஒருவராய் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்தவர் நடிகர் சுரேஷ் சக்கரவர்த்தி.
இளம் போட்டியாளர்கள் பலருக்கும் டஃப் கொடுக்கும் வகையில் பட்டையை கிளப்பினார்.

கொளுத்தி போடப்போகிறேன்
கொளுத்தி போடப்போகிறேன் என்று கூறியே ஹவுஸ்மெட்ஸின் பிபியை எகிற வைத்தார். யாரையும் ஏமாற்றாமல், மனதில் பட்டதை பேசி நேர்மையாக விளையாடினார் சுரேஷ் சக்கரவர்த்தி. எந்த டாஸ்க்காக இருந்தாலும் முழு ஈடுபாட்டுடன் பங்கேற்றார்.

அனிதாவுக்கு ஆனந்தம்
அனிதா, அர்ச்சனா, சனம் என பலரையும் கதற விட்டார். ரியோ, பாலாஜி என பலரின் பிளட் பிரஷரையும் எகிற வைத்தார். பிக்பாஸ் வீட்டுக்குள் பலருக்கும் தலைவலியாய் இருந்தார். குறிப்பாக சுரேஷ் தாத்தா வெளியே சென்றதில் அனிதாவுக்கு அப்படி ஒரு ஆனந்தம்.

ரசிகர்கள் அப்செட்
இந்நிலையில் தீபாவளிக்கு முந்தைய வார எவிக்ஷனில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். சுரேஷ் சக்கரவர்த்தியின் எவிக்ஷன் அவரது ரசிகர்களை ரொம்பவே அப்செட்டாக்கியது. பலரும் சுரேஷ் சக்கரவர்ததி இல்லாத பிக்பாஸை இனி பார்க்கப் போவதில்லை என சூளுரைத்தனர்.

காரணம் என்ன?
அவருக்கு ஃபேல்வெல் கொடுத்த கமல், சுரேஷ் சக்கரவர்த்தியை நான் அனுப்பவில்லை, நான் அனுப்பியதாக வெளியாகும் தகவலை நம்பாதீர்கள். ஒரு முடிவு மற்றொன்றின் தொடக்கமாக இருக்கலாம். அவர் வெளியே செல்வதற்கான காரணம் உள்ளேயும் இருக்கலாம்.. சுரேஷாகவும் இருக்கலாம்.. என்ன என்று விவாதியுங்கள்.. என்றார் கமல்.

குக்கு வித் கோமாளி 2
இதனைக் கேட்ட ரசிகர்கள் சுரேஷ் சக்கரவர்த்தி தானாகதான் வெளியேறி இருக்கிறார் என்று சமாதானப்படுத்திக் கொண்டனர். மேலும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக்கு வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் சுரேஷ் பங்கேற்க போகிறார் என்றும் தகவல் பரவியது.

சுரேஷ் தாத்தா ரீஎன்ட்ரி
ஆனால் குக்கு வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் இதுவரை சுரேஷ் சக்கரவர்த்தி பங்கேற்கவில்லை. இந்நிலையில் சுரேஷ் சக்கரவர்த்தி மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரேட்டிங்கில் சரிவு
வரும் வார நாட்களில் சுரேஷ் சக்கரவர்த்தி பிக்பாஸ் வீட்டுக்குள் வருவார் என நம்ப தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. சுரேஷ் சக்கரவர்த்தி சென்ற பிறகு பிக்பாஸ் ரேட்டிங்கில் சரிவை சந்தித்ததாக தெரிகிறது.

கொண்டாடும் ரசிகர்கள்
அதனை மீட்டெடுக்கவும் சுவாரசியத்தை கூட்டவுமே சுரேஷ் சக்கரவர்த்தியை பிக்பாஸ் டீம் மீண்டும் களமிறக்க உள்ளதாக கூறப்படுகிறது. சுரேஷ் சக்கரவர்த்தி மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் வரவுள்ளதை அறிந்த ரசிகர்கள் இப்போதே கொண்டாட தொடங்கிவிட்டனர்.


Click it and Unblock the Notifications











