ஆத்தாடி.. விட்டதையெல்லாம் பிடிக்கும் வடிவேலு.. இத்தனை படங்கள் கைவசமா? தீயாய் பரவும் தகவல்!

சென்னை: நடிகர் வடிவேலு கைவசம் பல படங்கள் இருப்பதா தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் ராஜ்கிரணிண் என் ராசாவின் மனசிலே படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்தவர் நடிகர் வடிவேலு.

மதுரையை பூர்விகமாக கொண்ட வடிவேலு தொடர்ந்து பல படங்களில் நகைச்சுவை நடிகராகவும் குணச்சித்திர நடிகராகவும் நடித்துள்ளார்.

மூன்றரை வயது குழந்தை ஜெசிக்காவிற்கு இதய நோய்... உங்களால் முடிந்த உதவி செய்யுங்கள்

காமெடி உலகின் அரசன் வடிவேலு

காமெடி உலகின் அரசன் வடிவேலு

மற்றவர்களை காயப்படுத்தாமல் தன்னைத்தானே கேலி செய்துக்கொண்டு ரசிகர்களை சிரிக்க வைப்பதில் வடிவேலுவுக்கு நிகர் வடிவேலுதான். இதனாலேயே இன்றும் தமிழ் சினிமாவின் காமெடி உலகில் இன்றும் அரசனாக வலம் வருகிறார்.

விஜயகாந்த் குறித்து கடும் விமர்சனம்

விஜயகாந்த் குறித்து கடும் விமர்சனம்

இந்நிலையில் கடந்த சில ஆண்டுளாக சினிமாவில் வாய்ப்பில்லாமல் தவித்து வருகிறார் வடிவேலு.

2011ஆம் ஆண்டு சட்டசபை பொதுத் தேர்தலின்போது தேமுதிக இடம்பெற்றிருந்த அதிமுக கூட்டணிக்கு எதிராக வடிவேலு பிரச்சாரம் செய்தார். தேமுதிக தலைவர் விஜயகாந்தை கடுமையாக விமர்சித்தார் வடிவேலு.

இம்சை அரசன் 24ம் புலிகேசி

இம்சை அரசன் 24ம் புலிகேசி

அந்த தேர்தலில் அதிமுக - தேமுதிக கூட்டணி வெற்றி பெற்றது. அதன் பிறகு வடிவேலுவுக்கு பட வாய்ப்புகள் குறையத் தொடங்கின. இருப்பினும் ஒரு சில படங்களில் தலைக்காட்டி வந்தார் வடிவேலு. இந்நிலையில் இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கத்தில் வடிவேலு கூட்டணியில் மாபெரும் வெற்றிபெற்ற இம்சை அரசன் 23ஆம் புலிகேசி திரைப்படத்தின் 2வது பாகத்தை இம்சை அரசன் 24ம் புலிகேசி என்ற பெயரில் உருவாக்க திட்டமிட்டனர்.

அடம்பிடித்த வடிவேலு - கருத்து வேறுபாடுகள்

அடம்பிடித்த வடிவேலு - கருத்து வேறுபாடுகள்

படத்தின் பணிகள் துவங்கியது முதலே இயக்குனர் சிம்புதேவனுக்கு வடிவேலுக்கும் இடையே படத்தின் கதை தொடர்பாக கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. சிம்புதேவன் சொன்ன காட்சிகளில் வடிவேலுவுக்கு சம்மதம் இல்லாததால் தொடர்ந்து படத்தின் திரைக்கதையில் மாற்றம் செய்யுமாறு வடிவேலு வற்புறுத்தியதாக தகவல் வெளியானது.

வடிவேலுக்கு ரெட் கார்டு வாங்கிய ஷங்கர்

வடிவேலுக்கு ரெட் கார்டு வாங்கிய ஷங்கர்

இதனால் படக்குழுவு அப்செட்டானாது. மேலும் படப்பிடிப்பு தொடங்கிய பிறகும் படப்பிடிப்பில் பங்கேற்காமல் இருந்தார் வடிவேலு. கேரவன் வரை வந்த வடிவேலு படப்பிடிப்பில் பங்கேற்காமல் சென்றுவிட்டதாகவும் கூறப்பட்டது. இதனால் தயாரிப்பாளரான ஷங்கருக்கு பல கோடி நஷ்டம் ஏற்பட, வடிவேலு இனிமேல் நடிக்கக்கூடாது என ரெட் கார்டு பெற்றார்.

வடிவேலுவை காணாதது பெரும் கவலை

வடிவேலுவை காணாதது பெரும் கவலை

இதனை தொடர்ந்து கடந்த சில ஆண்டுகளாக பட வாய்ப்புகள் இல்லாமல் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் தனது தவறுக்காக கண்கள் கலங்கி வருகிறார் வடிவேலு. இந்நிலையில் வடிவேலு மீண்டும் நடிக்க வருகிறார் என கடந்த சில மாதங்களாக தகவல் பரவி வருகிறது. பெரியவர் முதல் சிறு குழந்தைகள் வரை ஏராளமான ரசிகர்களை கொண்டிருந்த வடிவேலுவை படத்தில் பார்க்க முடியாமல் இருப்பது ரசிகர்களுக்கு பெரும் கவலையாக உள்ளது.

மீம்ஸ் மூலம் ஆறுதல் அளித்த வடிவேலு

மீம்ஸ் மூலம் ஆறுதல் அளித்த வடிவேலு

வடிவேலு நடிக்காமல் இருந்தாலும் அவருடைய மீம்ஸ்கள் இணையத்தை தெறிக்கவிட்டு ஆறுதல் அளித்து வருகிறது. இந்நிலையில் மீண்டும் 24 ஆம் புலிகேசி படத்தில் வடிவேலு நடிக்க உள்ளதாக கடந்த சில நாட்களாக தகவல் பரவி வந்தது. அதனை தொடர்ந்து சின்னத்திரை நிகழ்ச்சி மூலம் மாஸ் என்ட்ரி கொடுக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது.

வடிவேலு கம் பேக் - புதிய தகவல்

வடிவேலு கம் பேக் - புதிய தகவல்

கடந்த சில நாட்களுக்கு முன்பு டிடெக்டிவ் நேசமணி என்ற துப்பறியும் கதையில் வடிவேல் நடிக்க இருப்பதாக போஸ்டருடன் தகவல் வந்தது. பின்னர் அது வதந்தி என்று விளக்கம் அளிக்கப்பட்டது. இந்நிலையில் நடிகர் வடிவேலுவின் கம் பேக் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகி தீயாய் பரவி வருகிறது.

வலை விரிக்கும் 10 இயக்குநர்கள்

வலை விரிக்கும் 10 இயக்குநர்கள்

அதாவது ஓடிடி தளத்துக்காக தயாராகும் புதிய படங்களிலும், சுராஜ் இயக்கும் 'நாய் சேகர்' திரைப்படத்திலும் வடிவேலு நடிக்க உள்ளதாக தகவல் பரவி வருகிறது. மேலும் 10 இயக்குனர்கள் தங்களின் படத்துக்காக வடிவேலுவிடம் கதை சொல்லி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தயாரிப்பாளர்கள் சங்கம் தடுத்தால் ஓடிடி

தயாரிப்பாளர்கள் சங்கம் தடுத்தால் ஓடிடி

தயாரிப்பாளர்கள் சங்கம் தடுத்தால் வடிவேலு நடிக்கும் படங்களை ஓடிடி-யில் வெளியிடதிட்டமிடப்பட்டு உள்ளதாகவும் தெரிகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வடிவேலு மீண்டும் என்ட்ரி கொடுக்கப் போகிறார் என்ற தகவலே ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியாக உள்ளது.

நல்லதே நடக்கும் என பதில்

நல்லதே நடக்கும் என பதில்

கடந்த சில நாட்களுக்கு முன்பு முதல்வர் முக ஸ்டாலினை நேரில் சந்தித்த வடிவேலு கொரோனா நிவாரண நிதியாக 5 லட்சம் ரூபாய் வழங்கினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் மீண்டும் நடிப்பது தொடர்பாக கேள்வி எழுப்பியதற்கு நல்லதே நடக்கும் என நடிகர் வடிவேலு பதில் அளித்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Read more about: vadivelu வடிவேலு
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X