அட நம்ம வருவுக்கு கல்யாணமாமே? மாப்பிள்ளை தோனி, கோஹ்லிக்கு ரொம்ப நெருக்கமாம்.. டீம்லயும் இருக்காராம்!

சென்னை: நடிகை வரலக்ஷ்மிக்கு விரைவில் திருமணம் நடக்கவுள்ளதாக ஒரு தகவல் வைரலாகி வருகிறது.

Recommended Video

Varalakshmi Sarathkumar Marriage Exclusive Update | Cricket Star, Velvet Nagaram, Sarathkumar

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை வரலக்ஷ்மி. சிம்புவில் போடா போடா போடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.

தற்போது போட்டியே இல்லாமல் வில்லி கேரக்டரிலும் அசத்தி வருகிறார். சர்க்கார், சண்டக்கோழி2 ஆகிய படங்களில் வில்லி கதாப்பாத்திரத்தில் நடித்து தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துக் கொண்டார்.

படுக்கைக்கு அழைத்ததாக

படுக்கைக்கு அழைத்ததாக

கடைசியாக அவரது நடிப்பில் வெல்வெட் நகரம் என்ற படம் ரிலீஸ் ஆனது. நடிகை வரலக்ஷ்மி கடந்த சில நாட்களாய் அடிக்கடி செய்திகளில் அடிபட்டு வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பட வாய்ப்புக்காக தன்னையும் சிலர் படுக்கைக்கு அழைத்ததாக கூறி பரபரப்பை கிளப்பினார்.

விஷாலுடன் காதல்

விஷாலுடன் காதல்

பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் பெண்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வரும் வரலக்ஷ்மி, சக்தி என்ற பெண்கள் பாதுகாப்பு அமையும் நடத்தி வருகிறார். நடிகை வரலக்ஷ்மிக்கும் நடிகர் விஷாலுக்கும் இடையே காதல் என நீண்ட ஆண்டுகளாக பேசப்பட்டு வந்தது.

வருவுக்கு திருமணம்?

வருவுக்கு திருமணம்?

ஆனால் அதன்பிறகு இருவரின் காதலும் பிரேக்கப் ஆனதாக தெரிவிக்கப்பட்டது. அதன்பிறகு விஷாலுக்கு வேறு ஒரு தொழில் அதிபரின் மகளுடன் திருமண நிச்சயம் நடந்ததும் பிறகு திருமணம் நின்று போனதும் தனிக்கதை. இந்நிலையில் நடிகை வரலக்ஷ்மிக்கு திருமணம் நடக்க இருப்பதாக பேச்சு அடிபட்டு வருகிறது.

இந்திய கிரிக்கெட் அணி

இந்திய கிரிக்கெட் அணி

அதாவது, இந்த லாக்டவுன் பிரச்சனை தீர்ந்தப்பிறகு நடிகை வரலக்ஷ்மி சரத்குமாருக்கு திருமணம் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. வரலக்ஷ்மிக்கு திருமணம் பேசி முடிக்கப்பட்ட மாப்பிள்ளை இந்திய கிரிக்கெட் அணியில் முக்கிய பொறுப்பில் இருக்கிறார் கூறப்படுகிறது.

குடும்ப நண்பர்கள்

குடும்ப நண்பர்கள்

மேலும் இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான மகேந்திர சிங் தோனி மற்றும விராட் கோஹ்லி ஆகியோருக்கு மாப்பிள்ளை க்ளோஸ் ஃபிரண்ட் என்றும் கூறப்படுகிறது. வரலக்ஷ்மியின் குடும்பம் மாப்பிள்ளையின் குடும்பமும் பல ஆண்டுகளாக நண்பர்களாம்.

திருமணம் செய்ய முடிவு

திருமணம் செய்ய முடிவு

இந்நிலையில் இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த குடும்பத்தார் இருவருக்கும் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் சமூக வலைதளங்களில் தீயாய் பரவும் இந்த தகவல் குறித்து வரலக்ஷ்மியின் தரப்பு இதுவரை உறுதிப்படுத்தவில்லை.

மேலும் கிரிக்கெட் வீரர்

மேலும் கிரிக்கெட் வீரர்

ஏற்கனவே ராதிகா சரத்குமாரின் மகள் ரேயான், அபிமன்யு மிதுன் என்ற கிரிக்கெட் வீரரை காதலித்தார். இவர்களின் காதலை அறிந்த குடும்பத்தார் இருவருக்கும் திருமணம் செய்து வைத்தனர். அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் தற்போது சரத்குமாரின் குடும்பத்திற்கு மேலும் ஒரு கிரிக்கெட் வீரர் மாப்பிள்ளையாக வர போகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X