twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கொரோனா பாதிப்பு.. பிரபல கொரிய இயக்குநர் கிம் கி டுக் மரணம்.. சோகத்தில் திரையுலகம்.. அட்லி அஞ்சலி!

    |

    கொரியா: சர்வதேச அளவில் பிரபலமான தென் கொரிய இயக்குநர் கிம் கி டுக் கொரோனா தொற்று காரணமாக காலமானார். அவருக்கு வயது 59.

    3 அயர்ன், பேட் கய், பவ், மொபியஸ், ப்ரீத் என ஏகப்பட்ட தரமான படங்களை இயக்கியவர்.

    இடுப்பிலே கை.. காதலருடன் நீச்சல் குளத்தில்.. வேற லெவலில் ரொமான்ஸ் பண்ணும் பிரபல நடிகை!இடுப்பிலே கை.. காதலருடன் நீச்சல் குளத்தில்.. வேற லெவலில் ரொமான்ஸ் பண்ணும் பிரபல நடிகை!

    நம்ம ஊர் இயக்குநர்கள் அதிகம் இன்ஸ்பயர் ஆகி எடுக்கும் கொரிய படங்கள் இவருடையது தான் என்பது குறிப்பிடத்தக்கது.

    கொண்டு போன கொரோனா

    கொண்டு போன கொரோனா

    இந்த ஆண்டு ஏகப்பட்ட சினிமா பிரபலங்களை கொரோனா வைரஸ் அட்டாக் பண்ணி உள்ளது. சில பிரபலங்கள் கொரோனா பாதிப்பு காரணமாக பலியாகியும் உள்ளனர். அந்த வரிசையில், சர்வதேச பிரபலமான தென் கொரிய இயக்குநர் கிம் கி டுக் (வெள்ளிக்கிழமை) இன்று உயிரிழந்துள்ளார்.

    விரைவில் பிறந்தநாள்

    விரைவில் பிறந்தநாள்

    1960ம் ஆண்டு டிசம்பர் 20ம் தேதி பிறந்த கிம் கி டுக் விரைவில் தனது 60வது பிறந்தநாளை கொண்டாட இருந்தார். இந்நிலையில், பிறந்த மாதத்திலேயே அவரது உயிர் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இவ்வுலகை விட்டு பிரிந்து சென்றது. ஹாலிவுட் முதல் கோலிவுட் பிரபலங்கள் வரை கிம் கி டுக்கின் மரணத்தால் சோகமடைந்துள்ளனர்.

    ஏகப்பட்ட விருதுகள்

    ஏகப்பட்ட விருதுகள்

    கிம் கி டுக்கை விருது நாயகன் என்றே சொல்லலாம். வெனிஸில் நடந்த 69வது திரைப்பட விழாவில் கோல்டன் லயன் விருதை தனது Pieta படத்திற்காக தட்டிச்சென்றவர். 3 அயர்ன் படத்திற்காக 61வது வெனிஸ் விருது விழாவில் சில்வர் லயன் விருதை வென்றார். பெர்லின் திரைப்பட விழா, கான்ஸ் திரைப்பட விழா என ஏகப்பட்ட விருது விழாக்களில் சிறந்த இயக்குநருக்கான விருதுகளை பெற்று பிரபலமானவர்.

    தேடிய நண்பர்கள்

    தேடிய நண்பர்கள்

    கடந்த மாதம் நவம்பர் 20ம் தேதி லட்வியா நாட்டில் வீடு ஒன்றை வாங்க சென்றிருந்த கிம் கி டுக், அதன் பின்னர் எங்கே சென்றார் என்றே தெரியவில்லை. அவரது நண்பர்கள் கிம் கி டுக்கை தேடிய நிலையில், கொரோனா காரணமாக அனுமதிக்கப்பட்டு, இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இந்நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் ஒரு சிறந்த இயக்குநர் இந்த உலகத்தை விட்டு பிரியும் நிலை ஏற்பட்டுவிட்டது.

    அட்லி அஞ்சலி

    அட்லி அஞ்சலி

    சர்வதேச புகழ் பெற்ற கிம் கி டுக் மரணம் அடைந்த செய்தியை அறிந்த இயக்குநர் அட்லி, கிம் கி டுக்கின் புகைப்படத்தை ஷேர் செய்து இரங்கல் தெரிவித்துள்ளார். உலக சினிமாவுக்கு பேரிழப்பு என்றும், எல்லோருக்கும் மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன் சார் நீங்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

    English summary
    International fame Korean director Kim Ki Duk passed away due to corona virus. World Cinema fans mourns for his great loss.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X