அன்பான, பண்பான, அழகான சூர்யாவுக்கு.. தென்னிந்தியாவின் டாப் நடிகர்கள் அட்டகாச பிறந்தநாள் வாழ்த்து!

சென்னை: சூரரைப் போற்று, வாடிவாசல் படக்குழுவினர் சூர்யாவின் பிறந்தநாளுக்கு ரசிகர்களுக்கு சூப்பரான சர்ப்ரைஸ் எல்லாம் கொடுத்து வருகின்றனர்.

மேலும், தென்னிந்தியாவின் டாப் நடிகர்களான பலர் நடிகர் சூர்யாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை சமூக வலைதளங்களிலும் போன் மூலமாகவும் கூறி வருகின்றனர்.

சூர்யாவின் பிறந்தநாள் ஹாஷ்டேக் 5 மில்லியன் ட்வீட்களை கடந்து செம வைரலாக சென்று கொண்டிருக்கிறது.

நிவின் பாலி வாழ்த்து

நிவின் பாலி வாழ்த்து

அன்பாக அனைவரையும் அரவணைத்து போகும் நல்ல மனிதராக திகழும் சூர்யாவுக்கு தமிழ் நாட்டை தாண்டி கேரளா மற்றும் ஆந்திராவிலும் ரசிகர்கள் வட்டம் அதிகம். சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு பல கோலிவுட் பிரபலங்கள் வாழ்த்தி வரும் நிலையில், மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான நிவின் பாலி ஹேப்பி பர்த்டே டியர் சூர்யா என வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஹேப்பி பர்த்டே அண்ணா

ஹேப்பி பர்த்டே அண்ணா

மலையாள சினிமாவின் மெகா ஸ்டார் மம்மூட்டியின் மகனும் இளைஞர்களின் இதயங்களை கொள்ளை கொள்ளும் ஆணழகனுமான துல்கர் சல்மான், ஹேப்பி ஹேப்பி பர்த்டே அண்ணா.. இந்த நாள் அழகான நாளாக அமையட்டும், உங்கள் வாழ்வில் என்றுமே மகிழ்ச்சி பொங்கட்டும் என வாழ்த்தியுள்ளார்.

மோகன் லால் வாழ்த்து

மோகன் லால் வாழ்த்து

கே.வி. ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான படம் காப்பான். அந்த படத்தில் சூர்யாவுடன் இணைந்து நடித்த மலையாள திரையுலகின் சூப்பர்ஸ்டார் நடிகர் மோகன் லால், டியர் சூர்யா ஹேப்பி பர்த்டே என தனது ட்விட்டர் பக்கத்தில் அன்புடனும் பாசத்துடனும் வாழ்த்து தெரிவித்துள்ளார். மோகன் லாலில் ரசிகர்களும் சூர்யாவை வாழ்த்தி வருகின்றனர்.

அருவா ஹீரோயின்

அருவா ஹீரோயின்

ஆறு, வேல், சிங்கம் சீரிஸ் உள்ளிட்ட படங்களை சூர்யாவை வைத்து இயக்கி பிளாக்பஸ்டர் வெற்றிகளை கொடுத்த இயக்குநர் ஹரி இயக்கத்தில், அடுத்ததாக சூர்யா நடிப்பில் உருவாக உள்ள படம் அருவா. அந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ள நடிகை ராஷி கன்னா, நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்துக்களை கூறியுள்ளார்.

அன்பான, பண்பான, அழகான

அன்பான, பண்பான, அழகான

காமெடி நடிகர் சூரி, தனது ட்விட்டர் பக்கத்தில், "அன்பான, பண்பான, அழகான எங்க சூர்யா அண்ணனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்" என அவருடன் இருக்கும் செம எனர்ஜியான புகைப்படத்தை பதிவிட்டு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். வெற்றிமாறனின் அடுத்த படத்தில் சூரியும் ஹீரோவாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

வடிவேலு வாழ்த்து

வடிவேலு வாழ்த்து

"அகரம் மூலம் பல மாணவர்களை சிகரம் தொட வைத்த தம்பி சூர்யாவிற்கு என் பிறந்த நாள் வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு" என வைகைப்புயல் வடிவேலு தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். சூர்யா உடன் இணைந்து சில்லுனு ஒரு காதல், ஆதவன் உள்ளிட்ட பல படங்களில் வடிவேலு நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X