ரஜினியை ஏமாற்றிய நடிகை மீனா... அண்ணாத்தே சூட்டிங்கில் நேரடியாக சொன்ன சூப்பர்ஸ்டார்

சென்னை : சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்தின் அண்ணாத்தே படத்தில் நடிகை மீனா, நயன்தாரா, குஷ்பூ, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டவர்கள் நடித்து வருகின்றனர்.

இந்த படத்தின் சூட்டிங் தற்போது கொரோனா பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நடிகை மீனா தன்னை ஏமாற்றிவிட்டதாக நடிகர் ரஜினிகாந்த் சூட்டிங்கின்போது தெரிவித்தது குறித்து மீனா வெளிப்படுத்தியுள்ளார்.

தென்னிந்திய மொழி நடிகை

தென்னிந்திய மொழி நடிகை

தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை மீனா. தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழி படங்களில் நடித்துள்ளார். தற்போது அவரது மகள் நைனிகா விஜய்யுடன் தெறி படத்தில் நடித்து சிறப்பான பெயரை பெற்றுள்ளார்.

வசூலில் சாதனை

வசூலில் சாதனை

நடிகை மீனா தொடர்ந்து தென்னிந்திய மொழி படங்களில் நடித்து வருகிறார். மலையாளத்தில் த்ரிஷ்யம் 2 படத்தில் அவர் மோகன்லாலுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். இந்த படம் சமீபத்தில் வெளியாகி சிறப்பான விமர்சனங்களை பெற்றுள்ளது. முதல் பாகத்தை காட்டிலும் வசூலிலும் சாதனை படைத்துள்ளது.

Recommended Video

Annathe Shootingல Rajini Sir செமையா கலாச்சாரு | Meena Annathe Shooting Experience
ரஜினியுடன் நடிக்கும் மீனா

ரஜினியுடன் நடிக்கும் மீனா

இந்நிலையில் தற்போது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிவரும் அண்ணாத்தே படத்தில் மீனா நடித்து வருகிறார். அவருடன் குஷ்பூ, நயன்தாரா மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோரும் நடித்து வருகின்றனர். நான்கு ஹீரோயின்கள் நடித்துள்ள இந்த திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது.

ரஜினிக்கு ஏமாற்றத்தை தந்த மீனா

ரஜினிக்கு ஏமாற்றத்தை தந்த மீனா

இந்நிலையில் சமீபத்தில் மீனா அளித்துள்ள பேட்டி ஒன்றில் அண்ணாத்தே படப்பிடிப்பின்போது நடைபெற்ற சுவாரஸ்ய சம்பவம் குறித்து வெளிப்படுத்தியுள்ளார். படப்பிடிப்பின்போது அவரிடம் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், அவர் தனக்கு ஏமாற்றத்தை தந்துவிட்டதாக கூறியதாகவும் அதனால் தான் அதிர்ச்சி அடைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

40 ஆண்டு பயணம்

தொடர்ந்து ரஜினி சிரித்தபடி, நாங்கள் மாறிவிட்டோம் என்றும் ஆனால் வீரா படத்தில் பார்த்த மாதிரியே இப்போதும் மீனா இருப்பதாகவும் கூறி கலாட்டா செய்ததாகவும் மீனா தெரிவித்துள்ளார். மீனா திரையுலகிற்கு வந்து 40 ஆண்டுகள் பூர்த்தி ஆகியுள்ளது. இதையொட்டி அவர் அனைவருக்கும் நன்றி தெரிவித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X