நடிகர்கள் குறித்து அவதூறு பரப்பக் கூடாது.. பயில்வான் ரங்கநாதனுக்கு நடிகர் சங்கம் எச்சரிக்கை!
சென்னை: போதைப் பொருள் விவகாரம் கோலிவுட்டை ஆட்டுவித்து வரும் நிலையில், நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், மூத்த பத்திரிகையாளர், நடிகர் மற்றும் யூடியூபரான பயில்வான் ரங்கநாதன் பல முன்னணி நடிகர்களுக்கும், நடிகைகளுக்கும் போதைப் பொருள் விவகாரத்தில் தொடர்பு இருப்பதாக பேசி வருகிறார்.
மேலும், ஆரம்பத்தில் இருந்தே நடிகர்கள் சினிமாவில் வாய்ப்புத் தருவதாக நடிகைகளுடன் அட்ஜெஸ்ட்மென்ட் செய்வது உள்ளிட்ட பல கிசுகிசுக்களை அவர் பேசி வருகிறார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து சில நடிகைகள் அவருக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், பயில்வான் ரங்கநாதனுக்கு எதிராக சில வழக்கறிஞர்கள் வழக்கும் தொடுத்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
நடிகர்கள் குறித்து அவதூறு: பல்வேறு மீடியாக்களில் பணியாற்றியிருக்கிறேன். ஒரு போதும் தவறான தகவல்களை சொல்வது கிடையாது. எந்த நடிகரையும் நடிகைகளையும் அவமரியாதையாக பேசியது கிடையாது. ஆனால், இண்டஸ்ட்ரியில் இப்படியெல்லாம் நடக்கிறது என பயில்வான் ரங்கநாதன் தொடர்ந்து தனக்கு தோன்றியதை எல்லாம் பேசி வருகிறார். இந்நிலையில், இத்தனை வருடங்களாக அவருக்கு ஒரு சில நடிகர்கள் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தற்போது தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தென்னிந்திய நடிகர் சங்கம் எச்சரிக்கை: தென்னிந்திய நடிகர் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ளவர்கள் மீது தேவையற்ற அவதூறுகளை பரப்பும் பயில்வான் ரங்கநாதன் போன்றவர்கள் இத்துடன் அனைத்தையும் நிறுத்திக் கொள்ள வேண்டும். அதையும் மீறி நடிகர்கள் குறித்து அவதூறு கருத்துக்களை பரப்பினால், உடனடியாக சட்ட நடவடிக்கை பாயும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஏகப்பட்ட யூடியூபர்கள்: மூத்த பத்திரிகையாளர்கள் என்கிற பெயரில் பலர் யூடியூப் சேனல்களில் நடிகர்கள், நடிகைகள் குறித்த அவதூறு கருத்துக்களை பரப்பி வருகின்றனர் என்கிற குற்றச்சாட்டு தொடர்ந்து தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு கிளம்பி வந்த நிலையில், இப்படியொரு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளனர். தென்னிந்திய நடிகர்கள் சங்கத்தில் உறுப்பினர்களாக இருப்பவர்களுக்கு மாத மாதம் தீவிர உடல் பரிசோதனை உள்ளிட்டவற்றை செய்ய வேண்டும் என்றும் நடிகர்கள் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு வரும் நிலையில், அவர்களுக்கான பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாடுகளையும் தென்னிந்திய நடிகர் சங்கம் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் யூடியூபர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











