twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நயன்தாரா கோரிக்கையை ஏற்ற விஷால், நாசர்... நடிகர் சங்கம் அதிரடி நடவடிக்கை!

    தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில், பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது.

    |

    Recommended Video

    MEETOO ISSUE - நயன்தாரா கோரிக்கையை ஏற்ற நடிகர் சங்கம்- வீடியோ

    சென்னை: பாலியல் புகார்களை கையாள்வதற்காக, ஒன்பது பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது தென்னிந்திய நடிகர் சங்கம்.

    ஒட்டுமொத்த இந்திய சினிமா துறையை உலுக்கிய வார்த்தை 'மீ டூ'. வாய்ப்பு தருவதாகக் கூறி பாலியல் உறவுக்கு அழைக்கும் நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் என இதில் பலரது பெயர்களும் சிக்கியது.

    நடிகை ஸ்ரீரெட்டி தொடங்கி, சின்மயி வரை ஏராளமான நடிகைகள் மீ டூ ஹேஷ்டேக்கின் கீழ் புகார் கூறி பரபரப்பை கிளப்பினர்.

    திருமணம் பற்றி சிம்பு எடுத்த அதிரடி முடிவு... இதென்ன அப்பா டி.ஆர். இப்டி சொல்லிட்டார்..! திருமணம் பற்றி சிம்பு எடுத்த அதிரடி முடிவு... இதென்ன அப்பா டி.ஆர். இப்டி சொல்லிட்டார்..!

    நயன்தாரா வலியுறுத்தல்

    நயன்தாரா வலியுறுத்தல்

    நடிகை நயன்தாரா பற்றி ராதாரவி தெரிவித்த சர்ச்சை கருத்து, கடும் கண்டனங்களை சம்பாதித்தன. இதுபற்றி அறிக்கை வெளியிட்ட நயன்தாரா, உச்ச நீதிமன்ற ஆணைப்படி பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பற்றி விசாரிக்க விசாகா கமிட்டி அமைக்க வேண்டும் என நடிகர் சங்கத்துக்கு வலியுறுத்தினார்.

    விசாரணை குழு

    விசாரணை குழு

    இந்நிலையில், தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில், பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின் தலைவராக நடிகர் சங்கத் தலைவர் நாசர் செயல்படுவார். விஷால், கார்த்தி, பூச்சி முருகன், குஷ்பு, ரோகிணி, சுஹாசினி மற்றும் சமூக ஆர்வலர், வழக்கறிஞர் என மொத்தம் ஒன்பது பேர் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

    பாதிக்கப்படும் நடிகைகள்

    பாதிக்கப்படும் நடிகைகள்

    பாலியல் ரீதியாக பாதிக்கப்படும் நடிகைகள் இந்த குழுவிடம் புகார் அளித்தால், அதன் அடிப்படையில் இந்த குழு சம்மந்தப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தும். புகார் உண்மையாக இருக்கும் பட்சத்தில், சம்மந்தப்பட்ட நபர் நடவடிக்கை எடுக்க இக்குழுவுக்கு அதிகாரம் உள்ளது.

    திரைத்துறை எதிர்பார்ப்பு

    திரைத்துறை எதிர்பார்ப்பு

    திரையுலகில் பணியாற்றும் பெண்களுக்கான பாதுகாப்பை இந்த ஒன்பது பேர் கொண்ட குழு உறுதி செய்யும். இந்த நடவடிக்கையின் மூலம் தமிழ் சினிமாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் கட்டுப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Read more about: me too
    English summary
    The south Indian actor association have formed Visaka committee to address women issues regarding sexual harassment.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X