Just In
- 22 min ago
யாரு எமனா.. 2 மாசம் கழிச்சு வா.. சில்லுக்கருப்பட்டி இயக்குநரின் அடுத்த படைப்பு.. ஏலே டிரைலர் இதோ!
- 23 min ago
பிக்பாஸில் களைக்கட்டும் கள்ளக்காதல்.. புருஷன் வெளியே இருக்க இளைஞருடன் லூட்டியடிக்கும் பிரபல நடிகை!
- 50 min ago
ஜிகுஜிகு உடையில் கிளாமர் போஸ்… வாய் பிளந்து கதறும் சிங்கிள்ஸ் !
- 58 min ago
ஒரே ஒரு ட்வீட் தான்.. ஒட்டுமொத்த தனுஷ் ரசிகர்களும் ஹேப்பி.. கர்ணன் அனைத்தும் கொடுப்பான்!
Don't Miss!
- Sports
நிலையில்லாத ஆட்டங்கள்... மோஹுன் பகனுடன் மோதும் நார்த்ஈஸ்ட்... வெற்றிக்கனவு பலிக்குமா?
- News
விவசாயிகள் போராட்டத்தில் வன்முறை மூளுமானால்.. ஸ்டாலின் எச்சரிக்கை
- Finance
சீன நிறுவனத்தை நம்பாத இந்திய மக்கள்.. மோசமான நிலையில் ஷியோமி, ரியல்மி, ஓப்போ..!
- Automobiles
2 பெட்ரோல் என்ஜின் தேர்வுடன் விற்பனைக்கு வரும் ஸ்கோடா குஷாக்!! இந்தியாவில் மார்ச்சில் அறிமுகம்
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 26.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் மிகப்பெரிய நிதி நன்மையைப் பெற வாய்ப்பிருக்காம்…
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
கிறிஸ்துமஸ் தாத்தாவாக மாறிய சினிமா பிரபலங்கள்.. ஒவ்வொண்ணும் ஒவ்வொரு அழகு.. குவியுது வாழ்த்து!
சென்னை: கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டத்தை முன்னிட்டு நடிகைகள் கிறிஸ்துமஸ் தீமில் உடைகளை அணிந்து கொண்டு போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
நடிகைகள் சாக்ஷி அகர்வால், சனம் ஷெட்டி என உள்ளூர் நாயகிகள் தொடங்கி உலகளவில் பல்வேறு சர்வதேச மாடல்களும் நடிகைகளும் கிறிஸ்துமஸ் தீமில் உடையணிந்து கொண்டு போட்டோக்களாக இன்ஸ்டாகிராமில் போட்டு வருகின்றனர்.
நடிகைகள் இந்த கிறிஸ்துமஸ் பண்டிகையை எப்படி கொண்டாடுகிறார்கள் என ஒரு சின்ன டூர் போய் பார்க்கலாம்.
'புஷ்பா' படத்தில்.. தெலுங்கு ஹீரோ அல்லு அர்ஜுனுக்கு வில்லனாகிறாரா ஆர்யா..? பரபரக்கும் தகவல்!

சான்டா சாக்ஷி
கிறிஸ்துமஸ் என்றாலே அனைவருக்கும் சான்டா கிளாஸ் எனும் கிறிஸ்துமஸ் தாத்தா தான் நினைவுக்கு வருவார். சான்டா தாத்தாவாகத் தான் இருக்க வேண்டும் என்பது இல்லை. அழகான இளம் பெண்ணாகவும் இருக்கலாம் என ஏகப்பட்ட நடிகைகள் அந்த தீமில் உடையணிந்து கிறிஸ்துமஸை கொண்டாடி வருகின்றனர். சான்டாவாக மாறி எப்படி போஸ் கொடுத்துருக்கிறார் சாக்ஷி அகர்வால் என்பதை பாருங்கள்.

சான்டாவாக சனம் ஷெட்டி
பிக் பாஸ் தமிழ் சீசன் 4ல் போட்டியாளராக கலந்து கொண்டு சமீபத்தில் வெளியேறிய சனம் ஷெட்டிக்கு சமூக வலைதளத்தில் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். ஓவியாவுக்கு பிறகு சனம் ஷெட்டியைத் தான் பிக் பாஸ் ரசிகர்கள் தலைவி என அழைத்துள்ளனர். இந்நிலையில், கிறிஸ்துமஸை முன்னிட்டு சான்டாவாக மாறியுள்ளார் சனம்.

ஷாலு சான்டா
வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் காமெடி நடிகையான அறிமுகமாகி இரண்டாம் குத்து படத்தில் கவர்ச்சி கதாபாத்திரமாக மாறிய நடிகை ஷாலு ஷம்முவும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, பச்சை நிற கிளிட்டர் உடை அணிந்து தலையில் சான்டா தொப்பியை மாட்டிக் கொண்டு செம க்யூட் டாலாக போஸ் கொடுத்துள்ளார்.

தமிழ்ப்படம் நடிகை
அகில உலக சூப்பர்ஸ்டார் சிவா நடிப்பில் வெளியான தமிழ்ப்படம் 2 மற்றும் இந்த ஆண்டு ஹிப் ஹாப் தமிழா ஆதி நடிப்பில் வெளியான நான் சிரித்தால் உள்ளிட்ட படங்களில் நாயகியாக நடித்துள்ள நடிகை ஐஸ்வர்யா மேனன் அழகானா சான்ட்டாவாக மாறியது மட்டுமின்றி தன்னுடைய செல்ல நாய்க்கும் சான்டா தொப்பியை மாட்டிவிடும் க்யூட் போட்டோ வைரலாகி வருகிறது.

காந்த கண்ணழகியின் கிறிஸ்துமஸ்
சிகப்பு நிற ஓவர் கோட்டை அணிந்து கொண்டு கிறிஸ்துமஸ் மரத்தின் அருகே சிரிப்புடன் போஸ் கொடுத்து தனது ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் தின வாழ்த்துக்களை சொல்லி உள்ளார் 'காந்த கண்ணழகி' அனு இம்மானுவேல். நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். மேலும், ஏகப்பட்ட நடிகைகள் தங்கள் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை சமூக வலைதளத்தில் போட்டோக்களாக போட்டு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.