ஆண் நண்பருடன் 5 நட்சத்திர ஹோட்டலில் இருந்த பிரபல தென்னிந்திய நடிகை அதிகாலை 3 மணிக்கு அதிரடி கைது

மும்பை: டோலிவுட் நடிகை நைரா ஷா மற்றும் அவரது ஆண் நண்பர் மும்பையில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதிகாலை 3 மணிக்கு இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இருவரும் போதைப் பொருள் புழக்கம் கொண்டிருந்ததாக போதைப் பொருள் பிரிவு போலீசார் இவர்களை கைது செய்துள்ளனர்.

தென்னிந்திய நடிகை

தென்னிந்திய நடிகை

ஸ்ரீகாந்த், ராய் லக்‌ஷ்மி நடிப்பில் வெளியான மிருகா, தெலுங்கில் வெளியான புர்ரா கதா மற்றும் ஹோ கயா டோட்டல் சியப்பா உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை நைரா ஷா. திங்கட்கிழமை அதிகாலையில் இருவரையும் போதை தடுப்புப் பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளது சினிமா உலகில் பரபரப்பை கிளப்பி உள்ளது.

பர்த்டே பார்ட்டி

பர்த்டே பார்ட்டி

நடிகை நைரா ஷாவின் பிறந்த நாள் பார்ட்டி கொண்டாட்டத்தில் தடை செய்யப்பட்ட போதைப் பொருள் புழக்கத்தில் இருப்பதாக போலீசாருக்கு கிடைத்த தகவலை தொடர்ந்து அதிகாலை 3 மணி அளவில் நடத்திய அதிரடி சோதனையில் இருவரும் வசமாக சிக்கி உள்ளனர்.

ஒரு கிராம் சராஸ்

ஒரு கிராம் சராஸ்

சிகரெட்டில் வைத்து இழுக்கக் கூடிய சராஸ் எனும் தடை செய்யப்பட்ட போதைப் பொருள் ஒரு கிராம் அளவிற்கு இவர்கள் இருவரையும் கைது செய்யும் போது சம்பவ இடத்தில் சிக்கியதாக போலீசார் கூறியுள்ளனர். மேலும், நடிகை நைரா ஷா மற்றும் அவரது ஆண் நண்பர் ஆஷிக் இருவரையும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி பின்னர் நீதிபதி முன்னர் ஆஜர் படுத்தினர்.

ஜாமின்

ஜாமின்

நீதிபதி முன்னர் நிறுத்தப்பட்ட இருவருக்கும் திங்கட்கிழமை ஜாமின் வழங்கப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே மும்பையில் போதைப் பொருள் புழக்கம் அதிகளவில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

சுஷாந்த் சிங் மரணம்

சுஷாந்த் சிங் மரணம்

கடந்த ஆண்டு ஜூன் 14ம் தேதி நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டார். அவரது மரணத்தை விசாரித்த போலீசார் அவரது காதலி ரியா சக்கரவர்த்திக்கு இருக்கும் போதைப் பொருள் தொடர்பு குறித்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். பாலிவுட்டின் பெரிய தலைகளான பலருக்கும் போதைப் பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பதாக அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகி உள்ளன. மும்பையில் போதைப் பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த தொடர்ந்து போலீசார் தீவிரம் காட்டி வரும் நிலையில், ஞாயிறன்று இப்படியொரு போதைப் பார்ட்டி அரங்கேறி இருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X