Bikini day: இன்று உலக பிகினி தினம்...வெறித்தனமா போஸ் கொடுத்த நடிகைகள்!
சென்னை : இன்று உலக பிகினி தினம் கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில், பிகினியில் வெறித்தனமா போஸ் கொடுத்த நடிகைகளை பார்க்கலாம்.
பிகினி என்று அழைக்கப்படும் நீச்சல் உடை 1946 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 5-ந் தேதி லூயிஸ் ரியர்டு என்பவர் கண்டுபிடித்தார்.
இதனால் ஒவ்வொரு ஆண்டும் அந்த நாளில் பிகினி தினம் உலகம் முழுவதும் உள்ள மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
உலக பிகினி தினம்: 1946ம் ஆண்டே பிகினி உடை கண்டுபிடிக்கப்பட்டுவிட்டாலும், இந்த உடை அறுபதுகளில் ஹாலிவுட் படங்கள் மூலம் பிரபலமாக இந்தி சினிமாவில் மெல்ல தலைகாட்டத் தொடங்கியது. பிகினி உடை ஹிந்தி சினிமாவில் ஹீரோயின்களுக்கு பிடித்துப் போக, அடுத்து தமிழ் தமிழ் நடிகைகளும் பிகினி அணியத் தொடங்கினர்.

மஞ்சுளா: நடிகை மஞ்சுளா 1975 ஆம் ஆண்டு 'டாக்டர் சிவா' படத்தில் பிகினியில் நடித்திருந்தார். இவர் எம்.ஜி.ஆருடன் ரிக்ஷாகாரன் படத்தில் நடித்து முன்னணி நடிகை என பெயர் எடுத்தார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் என 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
மாதவி: தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி போன்ற ஐந்து மொழிகளில் முன்னணி நடிகையாக நடித்தவர் மாதவி. இவர் ஒரு சிறந்த பரதநாட்டிய கலைஞரும் கூட. இவர் கமலுடன் இணைந்து டிக் டிக் டிக் படத்தில் நடித்த போது பிகினியில் தோன்றியார். இவர் இந்தியில் நடித்த 'ஏக் துஜே கேலியே' மற்றும் 'மரோச்சரித்திரா' போன்ற படங்கள் குறிப்பிடத்தக்கவை.
அமலா: டிராஜேந்திரன் இயக்கத்தில் உருவான மைதிலி என் காதலி என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் அமலா. அந்த படத்தில் எட்டுமுழப் புடவையுடன் வலம் வந்த அமலா. சத்யராஜ் உடன் நடித்த 'ஜீவா' படத்தில் சூப்பர் ஹாட் பிகினியில் வந்து ரசிகர்களை திக்கு முக்காட வைத்தார்.

நயன்தாரா: நடிகை நயன்தாரா தற்போது இழுத்துபோர்த்திக் கொண்டு கவர்ச்சி காட்டாமல் நடித்தாலும், சினிமாவுக்கு வந்த ஆரம்பத்தில் முன்னணி இடத்தை பிடிக்க பில்லா படத்தில் பிளாக் பிகினியில் சும்மா ஜிவ்வினு இருந்தார். நயன்தாராவின் அந்த பிகினி புகைப்படம் தற்போது வரை டிரெண்டிங்கில் இருக்கிறது.

பிகினி தரிசனம்: அதே போல நடிகை அனுஷ்கா, த்ரிஷா, காஜல் அகர்வால், நமீதா, ஹன்சிகா மோத்வானி, சமந்தா என பல முன்னணி நடிகைகளும் பிகினி தரிசனம் கொடுத்துள்ளனர். அவர்களுக்கு போட்டியாக சோஷியல் மீடியா பிரபலங்களான தர்ஷா குப்தா, சாக்ஷி அகர்வால், ஷாலு ஷம்மு போன்றோரும் பிகினியில் போஸ் கொடுத்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











