விஜய் தலைமையில் மக்கள் ஆட்சி வெல்லட்டும்.. தென்னிந்திய ஜோதிடர்கள் நல சங்கத் தலைவர் வாழ்த்து!

சென்னை: தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க வேண்டும் என தமிழ்நாட்டில் அதிகபட்சமாக 1.7 கோடிக்கும் அதிகமான மக்கள் வாழ்க்குகளை செலுத்தியுள்ளனர். திமுக, அதிமுக இரண்டு கட்சிகளும் சேர்ந்தால் கூட எடுக்க முடியாத அளவுக்கான தொகுதிகளில் முதன்முறையாக தேர்தலை சந்தித்த விஜய்யின் தவெக கட்சி அதிகப்படியாக 108 இடங்களை வென்றுள்ளது.

ரஜினிகாந்த், கமல்ஹாசன், சத்யராஜ், சூர்யா, சிரஞ்சீவி, மோகன்லால், துல்கர் சல்மான், நானி, மகேஷ் பாபு, சிம்பு, தனுஷ், சிவகார்த்திகேயன், டைகர் ஷெராஃப், ஜெனிலியா, காஜல் அகர்வால், கீர்த்தி சுரேஷ், பூஜா ஹெக்டே, ராஷ்மிகா மந்தனா என பாலிவுட் முதல் டோலிவுட் வரை ஏகப்பட்ட நட்சத்திரங்கள் விஜய்க்கு வாழ்த்து கூறியுள்ளனர்.

South Indian Astrologers Welfare Association Head sends warm wishes to Vijay for his Great Victory

2026ம் ஆண்டு விஜய் முதல்வர் ஆவார் என கணித்து கோட் படத்தில் கார் நம்பர் பிளேட் வைத்த வெங்கட் பிரபுவையும் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், தென்னிந்திய ஜோதிடர்கள் நல சங்கத் தலைவர் பிரசன்ன மணிகண்டன் தனது வாழ்த்தினை தவெக தலைவர் விஜய்க்கு தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கையில், "தமிழக அரசியலில் புதிய அத்தியாயம் படைத்துள்ள மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு. விஜய் அவர்களுக்கு வாழ்த்துக்கள். தமிழகம் தழைக்க உங்கள் தலைமையில் மக்கள் ஆட்சி வெல்லட்டும்! 💐🙏 என்றும் உங்கள் வழி நடப்போம்" என பதிவிட்டுள்ளார்.

தேர்தல் நடந்து முடிந்தவுடன் விஜய் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்குச் சென்று வழிபட்டார். மேலும், அடுத்ததாக சீரடி சாய் பாபா கோயிலுக்குக் சென்று வழிபட்டார்.

விஜய்க்கு நீச்ச பங்க ராஜயோகம் உள்ளது என்றும் அவர் முதல்வராக வருவார் என்றும் ஜோதிடர்கள் கணித்த நிலையில், ஜோதிட சங்கத் தலைவர் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

பிரபல ஜோதிடர் ஷெல்வி உள்ளிட்ட பலரும் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. திருச்செந்தூரில் சத்ரு சம்ஹார யாகத்தில் விஜய் கலந்துக் கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகின. இன்று நடைபெற்ற வெற்றிப் பெற்ற எம்.எல்.ஏக்கள் ஆலோசனை கூட்டத்துக்கு வரும் போது புஸ்ஸி ஆனந்த் கைகளில் வேப்பில்லை எடுத்து வந்த காட்சிகளும் வைரலாகி வருகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X