நம்ப முடியல.. இதயம் நொறுங்கிவிட்டது.. பிரபல நடிகரின் மரணத்தால் சோகத்தில் மூழ்கி பிரபலங்கள்!

சென்னை: நடிகர் சிரஞ்சீவி சர்ஜாவின் திடீர் மரணத்தால் தென்னிந்திய திரைலகம் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளது.

Recommended Video

Chirenjeevi Sarja -விற்கு நடந்தது என்ன? வெளியான அதிர்ச்சி தகவல் | Arjun Sarja, Meghna Raj

நடிகர் சிரஞ்சீவி சர்ஜா நேற்று திடீர் கார்டியாக் அரெஸ்ட்டால் அகால மரணமடைந்தார். 39 வயதான சிரஞ்சீவி சர்ஜாவுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்புதான் நடிகை மேக்னா ராஜை திருமணம் செய்தார்.

இந்நிலையில் அவரது திடீர் மரணம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது திடீர் மறைவால் தென்னிந்திய திரைத்துறை பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளது.

நொறுங்கிவிட்டேன்

நொறுங்கிவிட்டேன்

சிரஞ்சீவி சர்ஜாவின் அகால மரணத்திற்கு தென்னிந்திய பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பல ஆண்டுகளாக சிரஞ்சீவி சர்ஜாவுடன் பழகி வந்த நடிகர் பிரித்திவிராஜ் பதிவிட்டுள்ள டிவிட்டில், சிரஞ்சீவி சர்ஜாவின் திடீர் மறைவு பற்றி கேட்க முற்றிலும் நொறுங்கிப் போயிவிட்டேன். மேக்னாவும் அவரது குடும்பம் இந்த அதிர்ச்சியில் இருந்தும் துக்கத்தில் இருந்தும் மீண்டு வர வேண்டும் என நான் பிரார்த்திக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

நம்ப முடியவில்லை

நம்ப முடியவில்லை

இதேபோல் நடிகை குஷ்புவும் நடிகர் சிரஞ்சீவி சர்ஜாவின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், நம்ப முடியவில்லை.. பயங்கரம்.. இந்த இளம் கன்னட நடிகரும் அர்ஜூன் சர்ஜாவின் மருமகனுமான 39 வயதான சிரஞ்சீவி சர்ஜாவின் மரணத்தை கேட்டு பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளேன். அவர் திறமையான நல்ல நடிகர். இதயம் அவரது இளம் மனைவியையும் குடும்பத்தையும் நினைத்து வருந்துகிறது. அவருடைய ஆன்மா சாந்தியடையட்டும் என தெரிவித்துள்ளார்.

வார்த்தைகள் இல்லை

வார்த்தைகள் இல்லை

இதேபோல் நடிகை ராஷ்மிகா மந்தனா பதிவிட்டுள்ள டிவிட்டில், சிரஞ்சீவி சர்ஜாவின் மரண தகவல் உண்மையிலேயே என்னுடைய இதயத்தை நொறுக்கி விட்டது. இது ரொம்ப சீக்கிரம். உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும் சிரு சர்ஜா.. எனக்கு பேச வார்த்தைகள் இல்லை என பதிவிட்டுள்ளார்.

பெரும் அதிர்ச்சி

பெரும் அதிர்ச்சி

இதேபோல் நடிகர் அல்லு சிறிஷும் சிரஞ்சீவி சர்ஜாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், கன்னட நடிகர் சிரஞ்சீவியின் திடீர் மரணத்தால் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு வெறும் 39 வயதுதான் ஆகிறது. அவரது குடும்பத்தாருக்கு என்னுடைய அனுதாபங்கள். உங்கள் ஆன்மா ஓய்வு எடுக்கட்டும் சிரு.. என பதிவிட்டுள்ளார்.

கடவுள் கொடூரமானவர்

கடவுள் கொடூரமானவர்

இதேபோல் நடிகர் கோணா வெங்கட் பதிவிட்டுள்ள டிவிட்டில், கன்னட ஹீரோ சிரஞ்சீவி சர்ஜா இல்லை என்ற தகவலை கேட்டு அதிர்ச்சியில் உறைந்திருக்கிறேன். கடவுள் மிகவும் கொடூரமானவர்.. அவரது சகோதரர் துருவ் சர்ஜா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்.. அவருடைய கனிவான ஆத்மா நிம்மதியாக ஓய்வெடுக்கட்டும் என பதிவிட்டுள்ளார்.

சீக்கிரம் போய்விட்டார்

சீக்கிரம் போய்விட்டார்

இதேபல் நடிகை நிக்கி கல்ராணி பதிவிட்டுள்ள டிவிட்டில் இது ரொம்பவே அதிர்ச்சியாக உள்ளது. அவர் வேடிக்கையான மற்றும் பாஸிட்டிவான ஒரு மனிதராக இருந்தார். ரொம்ப சீக்கிரம் போய்விட்டார்.. என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X