பாக்யராஜின் ராஜினாமாவை ஏற்க முடியாது: தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம்
Recommended Video

சென்னை: பாக்யராஜின் ராஜினாமா கடிதத்தை ஏற்க முடியாது என்று தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இது குறித்து தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,.

தாங்கள் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக கொடுத்த கடிதத்தை அனைத்து நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களுக்கு தொலைபேசியில் தெரிவித்தபோது அனைவரும் ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டனர்.
மேலும், நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் உங்களது ராஜினாமாவை ஏற்றுக் கொள்வதில்லை என்றும் நீங்களே தலைவராகத் தொடர வேண்டும் என்று அனைவரும் தொலைபேசி மூலம் தெரிவித்த கருத்தையே செயற்குழுவின் தீர்மானமாக எடுக்கப்பட்டுவிட்டது.
எனவே, எப்போதும் போல, தாங்களே தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவராகத் தொடர்கிறீர்கள் என்பதை இதன் மூலம் உங்களுக்கு அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











