ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழா... தேர்வான தமிழ், மலையாள படங்கள்

சென்னை : ஷாங்காய் திரைப்பட விழா இன்று துவங்கி வரும் 20ம் தேதிவரையில் நடைபெறவுள்ளது.

இந்த விழாவில் திரையிடுவதற்கு முன்பே நடிகர் சூர்யாவின் சூரரைப் போற்று திரைப்படம் தேர்வாகியுள்ளது.

இந்நிலையில் திரையிடுவதற்கு கூழாங்கல் மற்றும் மலையாள படமான தி கிரேட் இந்தியன் கிச்சன் படங்கள் தேர்வாகியுள்ளன.

20ம் தேதிவரை நடைபெறுகிறது

20ம் தேதிவரை நடைபெறுகிறது

மிகவும் பிரபலமான ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழா 2021 இன்று முதல் துவங்கியுள்ளது. இன்று துவங்கி வம்20ம் தேதிவரை நடைபெறவுள்ள இந்த திரைப்பட விழாவில் சூர்யா நடிப்பில் இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த சூரரை போற்று திரைப்படம் திரையிடப்படாமலேயே தேர்வு செய்யப்பட்டுள்ளது.

விருதுகளை பெற்ற கூழாங்கல்

விருதுகளை பெற்ற கூழாங்கல்

இதனிடையே நெதர்லாந்து ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழா மற்றும் நியூயார்க்கின் நியூ திரைப்பட விழா மற்றும் மோலோடிஸ்ட் சர்வதேச திரைப்பட விழா ஆகியவற்றில் தேர்வாகி திரையிடப்பட்டு சில விருதுகளையும் தட்டி வந்துள்ள கூழாங்கல் படமும் ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட உள்ளது.

ரவுடி பிக்சர்ஸ்

ரவுடி பிக்சர்ஸ்

இந்த திரைப்படத்தில் நடிகை நயன்தாராவும் நடித்துள்ள நிலையில், இதன் வெளியீட்டு உரிமையை நயன்தாராத மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோர் தங்களது ரவுடி பிக்சர்ஸ் சார்பில் வெளியீட்டு உரிமையை பெற்றுள்ளனர். அறிமுக இயக்குநர் வினோத்ராஜ் இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் இந்த படம் உருவாகியுள்ளது.

ஷாங்காய் விழாவில் திரையிடல்

ஷாங்காய் விழாவில் திரையிடல்

இதனிடையே, மலையாளத்தில் தி கிரேட் இந்தியன் கிச்சன் படமும் ஷாங்காய் திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகியுள்ளது. இயக்குநர் ஜியோ பேபி இயக்கியுள்ள இந்த படம் விமர்சன ரீதியாகவும் நல்ல பெயரை பெற்றுள்ளது. குடும்பம் என்னும் அமைப்பில் சுரண்டப்படும் பெண்களின் உழைப்பை மையமாக வைத்து இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது.

ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகி

ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகி

இந்த படம் தற்போது தமிழில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. மலையாளத்தில் நிமிணா சஜயன் கேரக்டரில் ஐஸ்வர்யா நடித்து வருகிறார். மேலும் ராகுல் ரவீந்திரன், யோகி பாபு ஆகியோரும் இந்த படத்தல் நடித்து வருகின்றனர். இயக்குநர் கண்ணன் டைரக்ஷனில் இந்த படம் உருவாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X