அவங்க செமையா வேலை பார்க்கிறாங்க.. ஆச்சரியமா இருக்கு.. மந்திரா பேடி நெகிழ்ச்சி!
சென்னை: சாஹோ திரைப்படத்தில் நடித்தது குறித்து பேசியுள்ள நடிகை மந்த்ரா பேடி தென்னிந்திய சினிமா பாலிவுட் படங்களைக் காட்டிலும் வித்தியாசமாக இருக்கிறது. அங்கு மக்கள் மிகவும் சுறுசுறுப்பாகவும், சரியாக திட்டமிடவும் செய்கிறார்கள். எனக்கு நல்ல வாய்ப்புகள் கொடுத்ததற்கு நான் அவர்களுக்கு கடமைப்பட்டுள்ளேன் என்று கூறியுள்ளார் மந்திரா பேடி.
தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான சாந்தி எனும் தொலைக்காட்சி தொடர் மூலம் இந்திய மக்களிடம் மிகவும் பிரபலமானவர் மந்திரா பேடி. பிறகு தனது கவர்ச்சி உடைகள் மூலம் ரசிகர்களை குதூகலப்படுத்தியவர்.

தனக்கு கிரிக்கெட் பற்றிய விஷய ஞானம் தெரியாவிட்டாலும் கூட, ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகளுக்கு தொகுப்பாளினியாக கவர்ச்சியாக உடையணிந்து வந்து மிகவும் பிரபலமானார். அதிலும் மிகவும் டைட் டி-சர்ட், ஜீன்ஸ் போட்டுக்கொண்டு கிரிக்கெட் கிரவுண்டில் வீரர்களிடம் இவர் பேசும் அழகே தனி. இதற்காகவே ஸ்டேடியத்திற்கு ரசிகர்கள் படையெடுத்த சம்பவமும் நடந்ததுண்டு.
பல ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு சிம்பு நடித்த மன்மதன் திரைப்படத்தில் கிளுகிளுப்பான மனநல மருத்துவராக நடித்தார். அடுத்ததாக பிரபாஸ் நடிப்பில், தமிழ், தெலுங்கு இந்தி என மூன்று மொழிகளில் வெளியான சாஹோ திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தற்சமயம் ஒரு வெப் சீரிஸிலும் நடித்து வருகிறார்.
சாஹோ திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அவரின் தென்னிந்திய திரைப்படங்களில் நடிப்பது குறித்து அவர் ஆர்வத்தோடு பதிலளிக்கையில், தென்னிந்திய சினிமா பாலிவுட் படங்களைக் காட்டிலும் வித்தியாசமாக இருக்கிறது. அங்கு மக்கள் மிகவும் சுறுசுறுப்பாகவும், சரியாக திட்டமிடவும் செய்கிறார்கள்.
அங்கு மிகவும் நவீன கதாபாத்திரங்களில் நடிப்பதற்காக வாய்ப்புகள் கொடுக்கப்படுகின்றன. மும்பையை காட்டிலும் அங்கு, அவர்களின் வேலை கலாச்சாரம் மிகவும் அற்புதமாகவும் மேம்பட்டதாகவும் இருக்கின்றன. தினம் தினம் புதியதோர் விஷயத்தை கற்க முடிகிறது.
மொழி பிரச்னை ஒன்று மட்டுமே சிறுது கடினமாகவுள்ளது. மற்றபடி அங்கே என் அனுபவங்களையும், திறமைகளையும் நான் மேம்படுத்திக்கொள்ள எனக்கு உறுதுணையாய் இருக்கிறார்கள். எனக்கு நல்ல வாய்ப்புகள் கொடுத்ததற்கு நான் அவர்களுக்கு கடமைப்பட்டுள்ளேன் என்று கூறியுள்ளார் மந்திரா பேடி.
சாஹோ திரைப்படத்திற்கு பிறகு அவர் நிச்சயம் பல வாய்ப்புகளை தென்னிந்திய சினிமாவில் பெறுவார் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











