இந்த ஆண்டு வெளியாகும் பெரிய தென்னிந்திய திரைப்படங்கள்.. ரசிகர்களிடம் அதிகரிக்கும் எதிர்பார்ப்பு!

சென்னை: கொரோனா தொற்றில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக சூழ்நிலை இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.

சினிமா ரசிகர்களுக்காக இந்தியா முழுவதும் பரவலாக திரையரங்குகள் திறக்கப்பட்டு வருகிறது.

இதைத்தொடர்ந்து இந்த ஆண்டில் ரிலீசுக்கு காத்துள்ள பெரிய தென்னிந்திய திரைப்படங்கள் குறித்த ஓர் பார்வை.

பிரபாஸ் - பூஜா கூட்டணி

பிரபாஸ் - பூஜா கூட்டணி

ராதா கிருஷ்ண குமார் இயக்கத்தில் பிரபாஸ், பூஜா ஹெக்டே நடிப்பில் ரிலீசுக்கு தயாராகி வரும் படம் ராதே ஷியாம். காதல் கதையாக வெளிவரவுள்ள இந்த படத்தின் இறுதிகட்ட பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. இந்த வருடம் ஏப்ரல் 30ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மிரட்டிய டீசர்

மிரட்டிய டீசர்

பிரஷாந்த் நீல் இயக்கத்தில் யாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி, சஞ்சய் தத் நடிப்பில் ரிலீசுக்கு தயாராகி வரும் படம் கே. ஜி. எஃப் - 2. இந்த படத்தின் மிரட்டலான டீசர் சமீபத்தில் வெளியாகி வைரலானது மட்டுமன்றி பல சாதனைகளையும் படைத்தது. இந்த வருடம் ஜூலை 30ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Recommended Video

KGF 2 Teaser ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை எற்படுத்தியுள்ளது - Filmibeat Tamil
எதிர்பார்க்கும் ரசிகர்கள்

எதிர்பார்க்கும் ரசிகர்கள்

தமிழ் சினிமா ரசிகர்கள் மிகவும் எதிர்ப்பார்த்து காத்துள்ள வலிமை படத்தை இயக்குனர் H. வினோத் இயக்கியுள்ளார். தல அஜித், ஹூமா குரேசி ஆகியோர் நடித்துள்ளனர். படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழு வீச்சில் நடந்து வரும் நிலையில் இந்த வருடம் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மீண்டும் தொடக்கம்

மீண்டும் தொடக்கம்

பிரபல இயக்குனர் ராஜ மௌலியின் இயக்கத்தில் ஜூனியர் N.T. R, ராம் சரண் நடிப்பில் தயாராகி வரும் படம் ஆர். ஆர்.ஆர். பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சிக்கான படப்பிடிப்பு தொடங்கி நடந்து வரும் நிலையில் இந்த வருடம் அக்டோபர் 15ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X