நடிப்பின் நாயகன் சூர்யாவுக்கு இன்று பிறந்தநாள்.. இணையத்தை அலற விடும் ரசிகர்கள்!

சென்னை : தென்னிந்தியாவில் மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தை கொண்டு பல ஆண்டுகளாக திரைப்படங்களில் சிறந்த நடிகராக விளங்கி வருபவர் நடிகர் சூர்யா சிவக்குமார்.

நேருக்கு நேர் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான சூர்யா பல்வேறு விதமான கதாபாத்திரத்தில் நடித்து இன்று தவிர்க்கமுடியாத முன்னணி நடிகராக வளர்ந்து நிற்கிறார்.

இவ்வாறு தனது நடிப்பின் மூலமும், உதவும் குணத்தின் மூலமும் பல கோடி ரசிகர்களை கொண்டுள்ள சூர்யா இன்று தனது 45 ஆவது பிறந்தநாளை குடும்பத்துடன் இணைந்து மகிழ்ச்சியாக கொண்டாடி வருகிறார்.

உங்களுக்கு நடிப்பு வரவில்லை

உங்களுக்கு நடிப்பு வரவில்லை

தமிழில் மிகப் பிரபலமான நடிகராக வலம் வந்த நடிகர் சிவக்குமாரின் மூத்த மகனான சூர்யா தனது தந்தை மிகப் பெரிய நடிகராக இருந்தாலும் ஆரம்ப காலத்தில் இவர் சந்திக்காத அவமானங்களே கிடையாது. இவர் நடித்த முதல் படத்திலேயே உங்களுக்கு நடிப்பு வரவில்லை நடனம் வரவில்லை என பலரும் கேலிக்குள்ளாக்கி இவரின் தன்னம்பிக்கையை உடைத்து மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

விஜய்யுடன் இணைந்து

விஜய்யுடன் இணைந்து

இயக்குனர் வசந்த் இயக்கத்தில் 1997 ஆம் ஆண்டு வெளியான நேருக்கு நேர் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் செய்யப்பட்ட சூர்யா, இந்த படத்தில் தளபதி விஜய்யுடன் இணைந்து இரண்டாவது கதாநாயகனாக நடித்திருந்தார்.

நடனமும் ஆட வராது

நடனமும் ஆட வராது

நேருக்கு நேர் இவருக்கு முதல் படம் என்பதால் நடிப்பதில் பயங்கரமான தடுமாற்றம் இருந்த நிலையில் பலரும் இவரை நடிக்கத் தெரியவில்லை என உதாசீனப்படுத்தினர். அதைப்போன்று நடனமும் சரிவர ஆட வராத சூர்யாவை ஒரு கல்லூரி நிகழ்ச்சியின்போது அங்கு இருந்த மாணவிகள் பலரும் இவரின் "அவள் வருவாளா" பாடலில் வரும் நடன அசைவுகளை கூறி கிண்டல் அடித்துள்ளனர்.

உச்ச நட்சத்திரமாக வளர்ந்து

உச்ச நட்சத்திரமாக வளர்ந்து

இவ்வாறு தான் நடித்த முதல் படத்திலேயே பல வலிகளை தாங்கிய சூர்யா தனக்கு வந்த அனைத்து எதிர்மறையான விமர்சனங்களையும் தற்பொழுது நேர்மறையாக ஆக்கி தன்னைத்தானே தயார்படுத்திக் கொண்டு தமிழ் சினிமாவில் யாரும் அசைக்க முடியாத உச்ச நட்சத்திரமாக வளர்ந்து நிற்கிறார்.

சாக்லேட் பாயாக

சாக்லேட் பாயாக

நேருக்குநேர் திரைப்படத்திற்குப் பிறகு பல படங்களில் நடித்திருந்தாலும், இவரால் ஒரு முழுமையான வெற்றி திரைப்படத்தை கொடுக்க முடியவில்லை. இயக்குனர் பாலா உடன் இவர் இணைந்த முதல் படமான நந்தா இவரது திரை வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. சாக்லேட் பாயாக வலம் வந்தவர் சூர்யா நந்தா திரைப்படத்தின் மூலம் இவரின் மீதுள்ள ரசிகர்களின் பார்வையை மாற்றி தன்னை ஒரு சிறந்த நடிகராக நிலைப்படுத்திக் கொண்டார்.

முதல் கமர்சியல் வெற்றி‘

முதல் கமர்சியல் வெற்றி‘

நந்தா படத்திற்கு பிறகு இவரது திரை வாழ்க்கையில் தொட்டதெல்லாம் வெற்றி என்றவாறு கௌதம் மேனன் இயக்கிய காக்க காக்க திரைப்படம் இவருக்கு முதல் கமர்சியல் வெற்றி திரைப்படமாக உருவாகி இவருக்கென தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கியது.

வித்தியாசமான கதாபாத்திரத்தில்

வித்தியாசமான கதாபாத்திரத்தில்

காக்க காக்க படத்தின் மூலம் ஆரம்பித்த இவரது வெற்றிப் பயணம் பிதாமகன், ஆயுத எழுத்து, கஜினி, வாரணம் ஆயிரம், அயன் என இன்றுவரை பல்வேறு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து தன்னுடைய ரசிகர்களை மட்டுமல்லாமல் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி வருகிறார்.

தெலுங்கிலும் நம்பர் ஒன்

தெலுங்கிலும் நம்பர் ஒன்

தமிழில் இவர் நடித்த திரைப்படங்கள் தெலுங்கில் டப் செய்து வெளியிடுவதால், தமிழ் ரசிகர்களுக்கு இணையாக தெலுங்கிலும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டு சூர்யா நம்பர் ஒன் நடிகராக தெலுங்கிலும் வலம் வந்து கொண்டிருக்கிறார். இன்றளவும் தெலுங்கு நடிகர்களை போன்று சூர்யாவின் திரைப்படங்களுக்கும் மிகப்பெரிய ஓபனிங் இருந்து வருகிறது.

சூரரைப் போற்று

சூரரைப் போற்று

தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் முன்னணி நடிகராக இருந்து வரும் சூர்யாவை நடிப்பின் நாயகன் என பலரும் அழைத்து வரும் நிலையில் இவரின் அசாத்தியமான நடிப்பில் உருவாகிவரும் சூரரைப் போற்று, அருவா போன்ற திரைப்படங்கள் இந்த ஆண்டு ரசிகர்களுக்கு விருந்தாக வெளியாக காத்திருக்கின்றது.

பிறந்தநாள்

பிறந்தநாள்

ஜூலை 23 ஆம் தேதியான இன்று இவர் தனது 45வது பிறந்தநாளை குடும்பத்துடன் மகிழ்ச்சியாக கொண்டாடி வருவதையொட்டி இவரது நண்பர்கள் திரைப் பிரபலங்கள் என பலரும் வாழ்த்துக்களை சொல்லி வரும் நிலையில் சூர்யாவின் தீவிர ரசிகர்கள் வாழ்த்துக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து இணையத்தை அலற விட்டு கொண்டிருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X