ஷூட்டிங் முடிஞ்சு வருஷக் கணக்காச்சு.. அமேசானில் வெளியாகிறதா காஜல் அகர்வால், தமன்னா நடித்த படங்கள்?

By

சென்னை: காஜல் அகர்வால், தமன்னா, பாருல் யாதவ் ஆகியோர் நடித்த படங்கள் ஒடிடியில் வெளியாக இருப்பதாகக் கூறப்படுகிறது..

Recommended Video

Aditirao Hydari dancing tribute to her guru | Sufiyum Sujathayum, Hey Sinamika

கங்கனா ரனவத் நடித்து 2014 ஆம் ஆண்டு வெளியான படம், 'குயின்'. விகாஷ் பால் இயக்கி இருந்தார்.

இந்தப் படத்தில் ராஜ்குமார் ராவ், லிசா ஹைடன், யோகேந்திர டிக்கு உட்பட பலர் நடித்திருந்தனர்.

தேசிய விருது

தேசிய விருது

சூப்பர் ஹிட்டான இதில் கங்கனாவின் நடிப்பு பரபரப்பாகப் பேசப்பட்டது. அவருக்குத் தேசிய விருதும் கிடைத்தது. இதையடுத்து இந்தப் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளத்தில் ரீமேக் ஆனது. தமிழில் இந்தப் படத்துக்கு பாரிஸ் பாரிஸ் என்று டைட்டில் வைத்துள்ள்னர். இதில் கங்கனா நடித்த கேரக்டரில், காஜல் அகர்வால் நடித்துள்ளார்.

தட் இஸ் மகாலட்சுமி

தட் இஸ் மகாலட்சுமி

எல்லி அவ்ரம், வினய பிரசாத், பார்கவி நாராயண், டி.பி.கஜேந்திரன் உட்பட பலர் நடித்துள்ளனர். கன்னடத்தில் இந்தப் படம், பாருல் யாதவ் நடிப்பில் பட்டர்ஃபிளை என்ற பெயரிலும் தெலுங்கில் தமன்னா நடிப்பில் தட் இஸ் மகாலட்சுமி என்ற பெயரிலும் மலையாளத்தில் மஞ்சிமா மோகன் நடிப்பில் ஸாம் ஸாம் என்ற பெயரிலும் உருவாகியுள்ளது.

ரமேஷ் அரவிந்த்

ரமேஷ் அரவிந்த்

நான்கு மொழிகளிலும் மீடியன்ட் நிறுவனம் சார்பில் மனு குமரன் தயாரித்துள்ளார். தமிழ், கன்னடத்தில் நடிகர் ரமேஷ் அரவிந்தும், தெலுங்கில் பிரஷாந்த் வர்மாவும், மலையாளத்தில் நீலகண்டாவும் படத்தை இயக்கி உள்ளனர். படம் எப்போதோ முடிந்துவிட்டது. இதன் டீசர் வெளியாகி சமூகவலைதளங்களில் வரவேற்பைப் பெற்றது.

ஓடிடி பிளாட்பார்ம்

ஓடிடி பிளாட்பார்ம்

இந்தியில் வெளியான குயின் படத்திற்கு கிடைத்த வரவேற்பு இதற்கும் கிடைக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் படம் சில வருடங்களாக ரிலீஸ் ஆகவில்லை. இந்நிலையில் இந்த லாக்டவுன் நேரத்தில் பல தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களை ஓடிடி பிளாட்பார்மில் வெளியிட்டு வருகின்றனர். தமிழில் பொன்மகள் வந்தாள், பெண்குயின் உட்பட சில படங்கள் அமேசான் பிரைமில் வெளியாயின. மேலும் சில படங்கள் வெளியாக உள்ளன.

அமேசான் பிரைம்

அமேசான் பிரைம்

இந்தியிலும் சில முன்னணி ஹீரோ நடித்த படங்களும் வெளியாக இருக்கின்றன. அந்த வரிசையில், இந்தப் படங்களும் அமேசானில் வெளியாகப் போவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுபற்றி அதிகாரபூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. ஆனால், படக்குழு இதுவரை எதுவும் தெரிவிக்கவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X