நீண்ட இடைவெளிக்குப் பிறகு.. சந்தானத்துடன் இணைந்து நடிக்கும பழம் பெரும் நடிகை!

சென்னை: நீண்ட இடைவெளிக்குப் பிறகு பழம் பெரும் நடிகை ஒருவர் நடிகர் சந்தானத்துடன் மீண்டும் நடிக்கவுள்ளார்.

இயக்குநர் ஆர் கண்ணன் நடிகர் சந்தானத்தை ஹீரோவாக்கி புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். இந்தப்படம் முழுவதும் நகைச்சுவை படமாக உருவாகிறது

இந்நிலையில் படத்தின் இயக்குநர் ஆர் கண்ணன் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், படத்தில் நடிக்கவுள்ள பழம்பெரும் நடிகை குறித்த தகவலை கூறியுள்ளார்.

வயதாகிவிட்டது

வயதாகிவிட்டது

அவர் பேசியதாவது, நடிகர் சந்தானத்துடன் பழம் பெரும் நடிகையான சவுகார் ஜானகி நடிக்கிறார். இந்தப்படத்தில் நடிக்க அவரை அழைத்த போது எனக்கு வயதாகிவிட்டது, என்னால் நடிக்க முடியாது என்று கூறிவிட்டார்.

400வது படம்

400வது படம்

பின்னர் படத்தின் கதையை கூறியதும் கதையை கேட்டுவிட்டு நடிக்க சம்மதித்துவிட்டார். இந்த படம் சவுகார் ஜானகிக்கு 400வது படம் ஆகும்.

காமெடி படம்

காமெடி படம்

தில்லுமுல்லு படத்தில் ரஜினியுடன் நடித்தது போன்ற கதாப்பாத்திரத்தில் தான் இந்தப் படத்தில் சவுகார் ஜானகி நடிக்கிறார். படம் முழுக்க காமெடியாக இருக்கும்.

வரவேற்பு பெறும்

வரவேற்பு பெறும்

இந்த வயதிலும் சவுகார் ஜானகி வசனங்களை நன்றாக நினைவில் வைத்து பேசுகிறார். சந்தானம் மற்றும் சவுகார் ஜானகியின் நகைச்சுவை காட்சிகள் பெரும் வரவேற்பை பெறும், இவ்வாறு இயக்குநர் ஆர் கண்ணன் தெரிவித்துள்ளார்.

5 மொழிகள்

5 மொழிகள்

87 வயதான சவுகார் ஜானகி தமிழில் கடைசியாக வானவராயன் வல்லவராயன் படத்தில் நடித்தார். தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிப்படங்களிலும் நடித்திருக்கிறார்.

லீடிங் ரோல்

லீடிங் ரோல்

1949ஆம் ஆண்டு முதல் நடித்த வரும் சவுகார் ஜானகி இதுவரை 387 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார். 1975 வரை ஹீரோயினாக லீடிங் ரோலில் நடித்த அவர் பின்னர் குணச்சித்திர கேரக்டர்களில் நடிக்க தொடங்கிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X