அம்மா, பாட்டி வேஷத்துக்குக் கூட தமிழ் நடிகைகளைப் புறக்கணிக்கிறார்களே!- சவுகார் ஜானகி
சென்னை: தமிழ் சினிமாவில் அம்மா, பாட்டி வேடங்களுக்குக் கூட மும்பையிலிருந்துதான் நடிகைகளை வரவழைக்கிறார்கள். தமிழ் நடிகைகளைப் புறக்கணிக்கிறார்கள், என்றார் நடிகை சவுகார் ஜானகி.
சென்னையில் நேற்று நடந்த வானவராயன் வல்லவராயன் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்று சவுகார் ஜானகி பேசுகையில், "11 வருடங்கள் கழித்து நான் நடிக்க வந்து இருக்கிறேன். அந்த காலத்தில் இதுபோன்ற பாடல் வெளியீட்டு விழாக்கள் எல்லாம் கிடையாது. இப்போது சினிமாவே மாறிவிட்டது.

தமிழ் பட உலகில் கதாநாயகி வேடத்துக்கு மும்பையில் இருந்து நடிகைகளை வரவழைக்கிறார்கள். அது சரிதான். ஆனால் அம்மா, பாட்டி வேடங்களுக்கு கூட, மும்பையில் இருந்து நடிகைகளை வரவழைப்பது வேதனையாக இருக்கிறது.
நான் நடித்த 'சவுகார்' படத்தை தயாரித்த நிறுவனம் ஒரு புதிய படம் தயாரித்தார்கள். அந்த பட பூஜையில் குத்துவிளக்கு ஏற்றுவதற்கு என்னைத்தான் அழைத்தார்கள்.
ஆனால் நடிப்பதற்கு என்னை அழைக்கவில்லை. மும்பையில் இருந்துதான் ஒரு நடிகையை வரவழைத்து நடிக்க வைத்தார்கள்,'' என்றார்.


Click it and Unblock the Notifications











