twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இசையால் மனங்களை வருடிய பாடும் நிலா பாலுவின் 75வது பிறந்தநாள்... குவியும் வாழ்த்துக்கள்

    |

    சென்னை : அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக இசையுலகில் ஆதிக்கம் செலுத்திய ஆளுமை எஸ்பிபி.

    பின்னணி பாடகராக மட்டுமின்றி நடிகர், இசையமைப்பாளர் என்று பல்வேறு தளங்களில் தன்னை நிரூபித்தவர்.

    கொரோனா நிவாரண நிதி… ரூ10 லட்சம் வழங்கினார் நடிகர் சூரி!கொரோனா நிவாரண நிதி… ரூ10 லட்சம் வழங்கினார் நடிகர் சூரி!

    தன்னுடைய மயக்கும் குரலால் ரசிகர்களை கட்டிப் போட்டவர். தொடர்ந்து இவரது பாடல்கள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

    குரலை மாற்றும் திறமை

    குரலை மாற்றும் திறமை

    எம்ஜிஆருக்காக தன்னுடைய பாடலை பாட ஆரம்பித்து தற்போதைய ஹீரோக்கள் வரை அனைவருக்கும் தனது குரலை பொருத்தியவர் எஸ்பிபி. இவரது சிறப்பு என்னவென்றால் தான் பாடும் ஹீரோக்களின் சொந்த குரல் போன்று தன்னுடைய குரலை மாற்றும் திறமை இவருக்கு இருந்தது.

    பாலிவுட்டிலும் முத்திரை

    பாலிவுட்டிலும் முத்திரை

    கடந்த 1946ல் ஆந்திராவின் நெல்லூரில் பிறந்த பாலு, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் மட்டுமின்றி பாலிவுட்டிலும் தனது முத்திரையை பதித்தவர். மண்ணில் இந்த காதல் இன்றி எதுவும் நடக்காது என்று மூச்சுவிடாமல் கூறியவர். மேலும் சத்தம் இல்லாத தனிமையையும் தன்னுடைய பாடலில் மூலம் கேட்டவர்.

    Recommended Video

    என்னத்தவம் செஞ்சேனோ... பாடலில் உருக்கம்... வார்த்தைகளில் வாழ்த்து... சூப்பர் சைந்தவி
    50,000க்கும் மேற்பட்ட பாடல்கள்

    50,000க்கும் மேற்பட்ட பாடல்கள்

    இயக்குநர், பாடகர், நடிகர், தயாரிப்பாளர் என பல முத்திரைகளை பதித்த இவர், 16 மொழிகளில் 50,000 பாடல்களுக்கும் மேல் பாடியவர். மடை திறந்து தாவும் நதியலையாக இவரது குரல் அனைவரது மனங்களிலும் பாய்ந்தது. இசைக்கலைஞன் தன்னுடைய ஆசைகள் ஆயிரம் என்றும் நினைத்தது பலித்தது என்றும் கூவியவர். ஆம்... 50,000 பாடல்களை பாடி தான் நினைத்ததை உண்மையாக்கினார்.

    சிறப்பான கூட்டணி

    சிறப்பான கூட்டணி

    தன்னுடைய ஒவ்வொரு பாடல்களிலும் ஒவ்வொரு பரிணாமத்தை ஏற்படுத்தியவர் எஸ்பிபி. ஒரு படம் சரியாக ஓடவில்லை என்றாலும் படத்தின் பாடல்களை எஸ்பிபி -இளையராஜா கூட்டணி ஹிட் செய்தது. இவர்களது கூட்டணியில் உருவான பாடல்களுக்காகவே படத்தை தியேட்டர்களில் போய் பார்க்கும் ரசிகர்கள் கூட்டமும் அந்த காலத்தில் இருந்தது.

    இசைத்துறைக்கு இழப்பு

    இசைத்துறைக்கு இழப்பு

    தன்னுடைய இறுதி காலம் வரையில் தன்னுடைய குரலை இனிமையாக வைத்துக் கொண்டிருந்தவர் எஸ்பிபி. சமீபத்தில் வெளியான தர்பார் படத்திலும் இவரது குரல் ஒலித்தது. கோடிக்கணக்கான மனங்களை தன்னுடைய பாடல்களால் வென்ற இந்த மாபெரும் இசைக்கலைஞர் கொரோனா என்ற அரக்கனை வெல்ல முடியாமல் கடந்த ஆண்டில் மறைந்தது இசைத்துறைக்கு மாபெரும் இழப்பு

    பாடலால் இசையஞ்சலி

    இன்று அவரது 75வது பிறந்தநாளை திரைத்துறையினர் கொண்டாடி வருகின்றனர். இசையமைப்பாளர் தமன், மனோபாலா உள்ளிட்டோர் ட்விட்டர் பக்கத்தின்மூலம் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். பாடகி ஸ்வேதா மோகன் அவரது பாடலால் அவருக்கு இசையஞ்சலி செலுத்தியுள்ளார்.

    English summary
    Singer SPB's 75th birthday celebration -Wishes pours in Social Media
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X