twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    40 ஆயிரத்துக்கும் அதிகம்.. பாடல்களுக்காக கின்னஸ் சாதனை படைத்த எஸ்பிபி.. ரசிகர்கள் உருக்கம்!

    By
    |

    சென்னை: மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், 40 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களை பாடியதற்காக கின்னஸ் சாதனை படைத்தவர்.

    பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் இன்று காலமானார். அவருக்கு வயது 74.

    கடந்த ஆகஸ்ட் மாதம் 5-ஆம் தேதி கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து சென்னை சூளைமேடு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    மறைந்தார் பாடு நிலா பாலு.. பாடகராக மட்டுமின்றி திரை வானில் நடிகராகவும் ஜொலித்தவர்!மறைந்தார் பாடு நிலா பாலு.. பாடகராக மட்டுமின்றி திரை வானில் நடிகராகவும் ஜொலித்தவர்!

    கொரோனா அறிகுறி

    கொரோனா அறிகுறி

    லேசான கொரோனா அறிகுறிகள் இருப்பதாகவும் விரைவில் குணமாகி திரும்பிவிடுவேன் என்றும் கூறியிருந்தார். கடந்த மாதம் 13 ஆம் தேதி அவரது உடல்நிலை மோசம் அடைந்தது. அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். செயற்கை சுவாசம் மற்றும் எக்மோ கருவிகள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது.

    கூட்டு பிரார்த்தனை

    கூட்டு பிரார்த்தனை

    வெளிநாட்டு மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை பெற்றும் அவருக்கு சிகிச்சை அளித்தனர். இதையடுத்து நடிகர், நடிகைகள் மற்றும் ரசிகர்கள் அவர் குணமடைய கூட்டு பிரார்த்தனை செய்தனர். பிறகு உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. பின்னர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டார். இந்நிலையில் கடந்த 51 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல்நிலை நேற்று திடீரென்று மோசம் அடைந்தது.

    கின்னஸ் சாதனை

    கின்னஸ் சாதனை

    அவர் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில் இன்று அவர் காலமானார். எஸ்.பி.பாலசுப்ரமணியம் சுமார் 40 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களை பாடியிருக்கிறார். அதிகமான பாடல்களை பாடியவர் என்பதற்காக கின்னஸ் சாதனை படைத்துள்ளார். இவர் 6 தேசிய விருதுகளை பெற்றவர். மத்திய அரசின் பத்மஶ்ரீ, பத்மபூஷன் விருதுகளையும் பெற்றுள்ளார்.

    ஆயிரம் நிலவே வா

    ஆயிரம் நிலவே வா

    கடந்த 50 வருடங்களாக முன்னணி பாடகராக இருக்கும் எஸ்.பி.பி, 'சாந்தி நிலையம்' படத்தில் வரும் இயற்கையெனும் இளையகன்னி என்ற பாடலைத்தான் முதன்முதலாக பாடினார் எஸ்.பி.பி. அது வெளிவரும் முன்பே எம்.ஜி.ஆர் நடித்த அடிமைப் பெண் படத்தில் பாடிய ஆயிரம் நிலவே வா பாடல் வெளிவந்து, அவருக்கு முதல் பாடலாகி விட்டது.

    Recommended Video

    SPB உடல் நலக் குறைவு காரணமாக மதியம் 1.04 மணிக்கு காலமானார்
    நெகிழ்ச்சியாக

    நெகிழ்ச்சியாக

    பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மறைவை அடுத்து ரசிகர்களும் சினிமா பிரபலங்களும், சமூக வலைதளங்களில் உருக்கமாகவும் நெகிழ்ச்சியாகவும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். பலர் அவர் பாடிய பாடல்களை குறிப்பிட்டு இரங்கல் தெரிவித்து வருகின்ரனர்.

    English summary
    SP Balasubramanian holds the Guinness World Record for recording the highest number of songs by a singer with over 40,000 songs.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X