40 ஆயிரம் பாடல்களை பாடியுள்ள எஸ்பிபி.. தமிழ் சினிமாவில் இந்த 3 ஹீரோக்களுக்கு மட்டும் பாடவே இல்லை!

சென்னை: தமிழ் சினிமாவில் டாப் ஹீரோக்களாக வலம் வரும் மூன்று பேருக்கு மட்டும் எஸ்பிபி ஒரு பாடலை கூட பாடவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Recommended Video

SPB Biography In Tamil | SP Balasubramaniyam | Filmibeat Tamil

பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் இதுவரை 42 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார். எந்த பாடகரும் செய்யாத சாதனையாக இதுவரை 16 மொழிகளில் பாடி சாதனை படைத்துள்ளார்.

பத்ம விருதுகள், தேசிய விருதுகள் என ஏராளமான விருதுகளையும் குவித்துள்ளார் எஸ்பி பாலசுப்ரமணியம். அதோடு 70க்கும் மேற்பட்ட படங்களிலும் நடித்துள்ளார்.

பொருந்தி போகும்

பொருந்தி போகும்

எஸ்பி பாலசுப்ரமணியம் நடிகர்களுக்கு ஏற்ப குரலில் மாற்றம் செய்து பாடுவதிலும் வல்லவர். குறிப்பாக தமிழ் சினிமாவில் ரஜினிகாந்துக்கு பாடும் ரஜினியே பாடுவது போன்றும் கமல்ஹாசனுக்கு பாடும் போது கமலே போன்றும் குரலை மாற்றி பாடுவார் எஸ்பி பாலசுப்ரமணியம். அவரது குரலும் அப்படியே அவர்களுக்கு பொருந்தி போகும்.

வெற்றிக்கு வித்திட்டவர்

வெற்றிக்கு வித்திட்டவர்

ரஜினிகாந்தின் படங்களில் பல ஓபனிங் பாடல்களை பாடி, ஆரம்பமே அசத்தல் என சொல்லும் அளவுக்கு பட்டைய கிளப்பியிருப்பார். ரஜினி, கமல் மட்டுமின் பிரபு, சத்யராஜ், விஜயகாந்த், மோகன், என பல ஹீரோக்களுக்கு குரலாய் இருந்து அவர்களின் வெற்றிக்கு வித்திட்டவர்.

 பாடாத நடிகர்கள்

பாடாத நடிகர்கள்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 50 நாட்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்று வந்தார் எஸ்பிபி. கொரோனா தொற்றில் இருந்து மீண்ட பிறகும் கூட அதன் பின் விளைவுகளால் கடந்த வெள்ளிக்கிழமை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். அவரது மரணம் திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் எஸ்பிபி இதுவரை பாடாத நடிகர்கள் யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

ஒரு பாடல் கூட..

ஒரு பாடல் கூட..

அதாவது, தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி மற்றும் விஷால்தான். இவர்கள் மூன்று பேருக்கும் எஸ்பி பாலசுப்ரமணியம் ஒரு பாடலைக் கூட பாடவில்லை. எஸ்பிபி திடீரென மரணமடைந்துவிட்டார்.

ஹீரோக்கள் வருத்தம்

ஹீரோக்கள் வருத்தம்

இதனால் எஸ்பிபி குரலில் இந்த மூன்று நடிகர்களுக்கும் இனி அப்படி ஒரு அரிய வாய்ப்பு கிடைக்கப்போவதில்லை. இந்நிலையில் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரரும் சிறந்த பண்பாளருமான லெஜன்ட்ரி பாடகரான எஸ்பிபியின் குரலில் தங்களுக்கு ஒரு பாடல் கூட கிடைக்கவில்லையே என வருத்தத்தில் ஆழ்ந்துள்ளனர் இந்த முன்னணி நடிகர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X