எஸ்.பி.பாலசுப்பிரமணியன் உடல்நிலையை விசாரிக்க மருத்துவமனைக்கு உறவினர்கள் வருகை.. போலீசார் குவிப்பு!
சென்னை: பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் சிகிச்சை பெற்று வரும் எம்ஜிஎம் மருத்துவமனைக்கு அவரது குடும்பத்தினர் வருகை தந்துள்ள நிலையில் போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.
பிரபல பாடகரான எஸ்பி பாலசுப்ரமணியம் கடந்த ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி லேசான கொரோனா தொற்று காரணமாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஆரம்பத்தில் லேசான தொற்றுடன் சென்ற அவருக்கு திடீரென, பாதிப்பு அதிகமானது. இதனால் ஐசியூவுக்கு மாற்றப்பட்ட எஸ்பிபிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

கூட்டுப்பிரார்த்தனை
ஒரு கட்டத்தில் அவரது உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டதால் திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். எஸ்பிபி விரைவில் குணமடைய வேண்டி தமிழகம் முழுவதும் பலரும் கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

மகன் தகவல்
இதனை தொடர்ந்து எஸ்பிபியின் உடல்நிலையில் படிப்படியாக முன்னேற்றம் ஏற்பட்டது. எஸ்பிபி பாலசுப்ரமணியம் விரைவில் வீட்டிற்கு வர ஆர்வமாக இருப்பதாக அவரது மகன் எஸ்பி சரண் தெரிவித்தார். இந்நிலையில் நேற்று எஸ்பிபியின் உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.

குடும்பத்தினர் வருகை
நடிகர் கமல்ஹாசன் மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்தார். திரைத்துறை பிரபலங்கள் பலரும் எஸ்பிபி மீண்டு வர வேண்டும் என டிவிட்டி வருகின்றனர். இந்நிலையில் சிகிச்சை பெறும் எஸ்பி பாலசுப்ரமணியத்தை காண அவரது குடும்பத்தினர் மருத்துவமனைக்கு வருகை தந்துள்ளனர்.

போலீஸ் குவிப்பு
எஸ்பி பாலசுப்ரமணியத்தின் மகன் எஸ்பிபி சரண், மகள் பல்லஎஸ்பி பாலசுப்ரமணியத்தின் மகன் எஸ்பிபி சரண், மகள் பல்லவி, மனைவி சாவித்திரி ஆகியோர் மருத்துவமனைக்கு வந்துள்ளனர். இதேபோல் இயக்குநர் பாரதிராஜா, வெங்கட் பிரபு உள்ளிட்டோரும் மருத்துவமனைக்கு வருகை தந்துள்ளனர். இதனை தொடர்ந்து மருத்துவமனை பகுதியில் ஆயுத படை போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். எஸ்பிபியை காண அவரது நண்பர்கள் இளையராஜா உள்ளிட்டோர் வர இருப்பதாக வெளியான தகவலை தொடர்ந்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. வி, மனைவி சாவித்திரி ஆகியோர் மருத்துவமனைக்கு வந்துள்ளனர். இதேபபோல் இயக்குநர் பாரதிராஜா, வெங்கட் பிபு உள்ளிட்டோரும் மருத்துவமனைக்கு வருகை தந்துள்ளனர். இதனை தொடர்ந்து மருத்துவமனை பகுதியில் ஆயுத படை போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். எஸ்பிபியை காண அவரது நண்பர்கள் இளையராஜா உள்ளிட்டோர் வர இருப்பதாக வெளியான தகவலை தொடர்ந்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











