twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    லவ் யூ ஆல்.. மறக்க முடியாத அந்த மூன்று வார்தை.. எஸ்பிபி எழுதிய கடைசிக் கடிதம்!

    |

    சென்னை: மறைந்த பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் கடைசியாக எழுதிய லவ் யூ ஆல் என்ற வார்த்தை ரசிகர்களால் மறக்க முடியாத வார்த்தையாகிவிட்டது.

    பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் கடந்த ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி கொரோனா தொற்றால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    எஸ்பிபிக்கு கொரோனா என பீதி பரவ தனது மொபைலில் இருந்து வீடியோ வெளியிட்டார் எஸ்பி பாலசுப்ரமணியம்.

    இசை இருக்கும் வரை உங்கள் புகழ் இருக்கும்.. கண்ணீருடன் விடை தருகிறோம்.. எஸ்பிபிக்காக உருகிய எஸ்கே!இசை இருக்கும் வரை உங்கள் புகழ் இருக்கும்.. கண்ணீருடன் விடை தருகிறோம்.. எஸ்பிபிக்காக உருகிய எஸ்கே!

    ஆறுதல் படுத்திய வீடியோ

    ஆறுதல் படுத்திய வீடியோ

    தனக்கு மைல்ட் கொரோனாதான் என்று கூறிய எஸ்பிபி, விரைவில் மீண்டு வந்துவிடுவேன், யாரும் கவலைப்பட வேண்டாம் என்றும் கூறினார். அவருக்கு கொரோனா என்று வெளியான செய்தியின் அதிர்ச்சியை அவரது அந்த வீடியோ கொஞ்சம் ஆறுதல் படுத்தியது.

    வெண்டிலேட்டர்

    வெண்டிலேட்டர்

    ஆனால் அடுத்தடுத்த நாட்களில் எஸ்பிபியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் மருத்துவமனை அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது என்றும் வெண்ட்டிலேட்டர் உதவியுடன் செயற்கை சுவாசம் அளிக்கப்படுவதாக அறிக்கை வெளியிட்டது.

    வேண்டாத தெய்வம் இல்லை

    வேண்டாத தெய்வம் இல்லை

    இதனால் அதிர்ச்சியடைந்த திரையுலகமும் ரசிகர்களும் எஸ்பிபி விரையில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று வேண்டாத தெய்வம் இல்லை. தமிழக மக்கள் அனைவருமே அவர் மீண்டு வரவேண்டும் என்று கூட்டுப்பிராத்தனை நடத்தினர். இதில் தமிழ் சினிமா உலகமும் பங்கேற்றது.

    பாடல்கள் ஒலிபரப்பு

    பாடல்கள் ஒலிபரப்பு

    இதன் பலனாக அடுத்தடுத்த நாட்களில் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. இதனால் எஸ்பிபி திரும்பி விடுவார் என நிம்மதி பெருமூச்சு விட்டனர் உலக ரசிகர்கள். அவருக்கு நினைவு திரும்ப அவர் பாடிய பாடல்களே அவர் சிகிச்சை பெற்ற வார்டில் ஒலிக்க விடப்பட்டது. அதற்கும் நல்ல பலன் கிடைத்தது.

    ஒத்துழைப்பு அளித்த உடல்

    ஒத்துழைப்பு அளித்த உடல்

    தனது அப்பாவின் உடல்நிலை சிகிச்சைக்கு ஒத்துழைப்பதாகவும் சீராக இருப்பதாகவும் கூறி வந்தார் எஸ்பிபியின் மகனான எஸ்பி சரண். தொடர் சிகிச்சையில் இருந்த எஸ்பிபிக்கு வெண்டிலேட்டர் மற்றும் எக்மோ சிகிச்சையுடன் பிசியோதெரபி சிகிச்சையும் வழங்கப்பட்டது.

    லவ் யூ ஆல்

    லவ் யூ ஆல்

    இதற்கு பலனாக, எஸ்பிபி தானாக பேனா பிடித்து எழுதும் நிலைக்கு முன்னேற்றமடைந்தார். தானே கைப்பட தனது ரசிகர்களுக்காக லவ் யூ ஆல் என்று எழுதினார். அவர் எழுதிய அந்த கடிதம் வைரலானது. அதனை பார்த்த ரசிகர்கள் எஸ்பிபிக்குதான் மக்கள் மீது எவ்வளவு அன்பு என சிலாகித்தனர் ரசிகர்கள்.

    கடைசி கடிதம்

    கடைசி கடிதம்

    ஆனால் அதுவே அவர் எழுதிய கடைசி கடிதமாகிவிட்டது. கொரோனா தொற்றில் இருந்து விடுபட்ட எஸ்பிபி எப்படியும் மீண்டு வந்துவிடுவார் என எதிர்பார்த்து காத்திருந்தனர் ரசிகர்கள். ஆனால், நேற்று முன்தினம் மாலை மருத்துவமனை வெளியிட்ட மருத்துவமனை அறிக்கை ரசிகர்களின் இதயங்களில் இடியாய் இறங்கியது.

    நேற்று மறைந்தார்

    நேற்று மறைந்தார்

    எஸ்பிபி மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக அந்த அறிக்கை கூறியது. இதனால் பதறிய ரசிகர்கள் மீண்டும் பிரார்த்தனை செய்தனர். ஆனால் இம்முறை பிரார்த்தனைக்கு எந்த பலனும் இல்லை. நேற்று பகல் 1.04 மணிக்கு இயற்கையோடு கலந்தார் எஸ்பிபி. அவரது மறைவு தமிழ் ரசிகர்கள் மட்டுமின்ற உலக இசை ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    English summary
    SP Balasubramaniyam's letter to fans from hospital become last letter of him. He wrote love you all when his health condition improvised in Hospital.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X