எஸ்பிபிக்கு அவரது மனைவி மீது எவ்ளோ காதல்.. மரியாதை என்பதை காண இந்த ஒரு வீடியோ போதும்!

சென்னை: மேடையில் பாடும்போது தனக்கு உதவிய மனைவியை அங்கேயே அணைத்தப்படி பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் புகழ்ந்து தள்ளிய வீடியோ வைரலாகி வருகிறது.

பிரபல பாடகரான எஸ்பி பாலசுப்ரமணியம் கல்லூரியில் தன்னுடன் படித்த சாவித்திரி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

பெற்றோர் எதிர்ப்பை மீறி நண்பர்கள் துணையுடன் காதலியை கரம் பிடித்தார் எஸ்பிபி. அவர்களுக்கு சரண் என்ற மகனும் பல்லவி என்ற மகளும் உள்ளனர்.

கோபித்ததே இல்லை

கோபித்ததே இல்லை

40 ஆண்டுகளுக்கும் மேலாக இணைப்பிரியாத தம்பதியாக இருவரும் வலம் வந்தனர். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை எஸ்பி பாலசுப்ரமணியம் தனது காதல் மனைவியை தனியே தவிக்கவிட்டு மறைந்தார். பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் திருமணம் ஆனது முதல் இதுவரை ஒரு முறை கூட அவரது மனைவியிடம் கோபித்தது இல்லை என அவரது குடும்பத்தினர் கூறி வருகின்றனர்.

மருத்துவமனையில் இருந்தபோது..

மருத்துவமனையில் இருந்தபோது..

இருவருக்கும் இடையில் இதுவரை எந்த மனக்கசப்பும் சண்டையும் வந்து தாங்கள் பார்த்ததில்லை என்றும் எஸ்பிபிக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்து வருகின்றனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தனிமையில் சிகிச்சை பெற்று வந்த போது கூட நாள்தோறும் மனைவியிடம் வீடியோ காலில் பேசி வந்துள்ளார் எஸ்பிபி.

இன்னமும் காதல்

இன்னமும் காதல்

மருத்துவமனைக்கு செல்லும் முன்பும் கூட உன்னைவிட்டு தனியாக எப்படி இருக்கப் போகிறேனோ என கண்ணீர்மல்க பேசிவிட்டு சென்ற எஸ்பிபி மீண்டு வரவேயில்லை. எஸ்பிபி அவர் மனைவி மீது இன்னமும் கொண்டிருந்த காதலை பலரும் அனுதாபத்துடன் வெளிப்படுத்தி வருகின்றனர்.

ஜானகியுடன் எஸ்பிபி

ஜானகியுடன் எஸ்பிபி

இந்நிலையில் எஸ்பிபி கச்சேரி மேடை ஒன்றில் தனது மனைவியை அணைத்தப்படி ஜாலியாக புகழ்ந்து பேசிய அரிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. அந்த மேடையில் பாடகி எஸ் ஜானகியுடன் பாடத் தயாராகிறார் எஸ்பிபி. அப்போது அந்த பாடலுக்கான நோட்டை அவரது மனைவியிடம் கொண்டு வருமாறு கேட்கிறார்.

மிஸ்ஸஸ் பாலசுப்ரமணியம்

மிஸ்ஸஸ் பாலசுப்ரமணியம்

அவர் வெட்கப்பட்டு தயங்க, ப்ளீஸ் கம்.. கம் ஹியர்.. வாங்கம்மா.. என வாஞ்சையோடு அழைக்கிறார் எஸ்பிபி. தயங்கியப்படியே வெட்கப்பட்டு அவர் மேடைக்கு வந்த அவர் எட்டியிருந்தப்படியே ஸ்டேன்டில் பாட்டுப்புத்தகத்தை வைத்து விட்டு கிளம்புகிறார். அதற்குள் பாடகி ஜானகி மிஸ்ஸஸ் பாலசுப்ரமணியம் என அறிமுகப்படுத்த வணக்கம் வைத்துவிட்டு கிளம்புகிறார்.

மனைவியை அணைத்து

மனைவியை அணைத்து

அப்போது இங்க வாங்கம்மா என அவரை அணைத்தப்படியே இவர்தான் என்னுடைய பிளே பேக் சிங்கர் என மகிழ்ச்சியுடன் கூறுகிறார் எஸ்பிபி. அதனை தொடர்ந்து ஜானகியின் பக்கம் திரும்பும் எஸ்பிபி, இந்தம்மா இந்த புக்கை இவரே தயார் செய்கிறார் என ஜானகி வைத்திருக்கும் குட்டி புத்தகத்தை பார்த்து கேலி செய்கிறார்.

பூதக்கண்ணாடி..

பூதக்கண்ணாடி..

அவங்களோட சைஸ்க்கு இந்த புத்தகம் ஓகேதான். ஆனால் என்னுடைய சைஸ்க்கு இந்த புத்தகத்தை பூதக்கண்ணாடி வைத்து பார்த்தால் கூட தெரியாது என தன்னையும் கேலி செய்து கொள்கிறார் எஸ்பிபி. தொடர்ந்து பேசும் அவர் இதுபோன்று பெரிய புக்காக இருக்கும் போது எந்த பக்கத்தில் எந்த பாடல் இருக்கிறது என பார்ப்பது யாராவது அசிஸ்டன்ட் இல்லாவிட்டால் பார்ப்பது கஷ்டம் என்கிறார்.

ஜாலி டான்ஸ்

ஜாலி டான்ஸ்

மேலும் என் மனைவி எனக்கு உதவி செய்கிறார். எனக்கு ரொம்பவே மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் அவரை நினைத்த பெருமை கொள்கிறேன் என க்யூட்டாக உடம்பையும் தலையையும் ஆட்டியப்படியே சொல்கிறார் எஸ்பிபி. இதனை அப்படி ரசித்த அங்கிருந்த மக்கள் ஓவென கத்தி மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர்.

மிஸ் யூ சார்

மிஸ் யூ சார்

எஸ்பிபியின் இந்த க்யூட் வீடியோ 2004ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது என தெரிகிறது. தற்போது எஸ்பிபி இந்த மண்ணில் இல்லாமல் போனதை தொடர்ந்து அவரது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவரது வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் மிஸ் யூ சார் என உருக்கமாக பகிர்ந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X