twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    போகுதே போகுதே என் பைங்கிளி வானிலே.. நெஞ்சை பிழியும் எஸ்பிபியின் டாப் 10 சோகப் பாடல்கள்!

    |

    சென்னை: எஸ்பிபி குரலில் ஒலித்த நெஞ்சை பிழியும் டாப் 10 சோகப் பாடல்கள் குறித்து ஓர் பார்வை..

    பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் உடல் நலக்குறைவால் நேற்று காலமானார். அவரது உடல் இன்று தாமரைப்பாக்கம் பண்ணை வீட்டில் நல் அடக்கம் செய்யப்பட்டது.

    அவர் உடல் மறைந்தாலும் அவர் குரலில் ஒலித்த பாடல்கள் இசை உள்ளவரை மறையாது என அவரது ரசிகர்கள் தங்களை தாங்களே ஆறுதல்படுத்தி வருகின்றனர்.

    வேத பாடசாலை தொடங்க.. தனது பூர்வீக வீட்டை காஞ்சி சங்கர மடத்துக்குத் தானமாக கொடுத்த எஸ்.பி.பி!வேத பாடசாலை தொடங்க.. தனது பூர்வீக வீட்டை காஞ்சி சங்கர மடத்துக்குத் தானமாக கொடுத்த எஸ்.பி.பி!

    மெருகேற்றுவதில் வல்லவர்

    மெருகேற்றுவதில் வல்லவர்

    பாடலுக்கும் பாடலின் சூழ்நிலைக்கும், நடிகர்களுக்கும் ஏற்ப குரல் வளத்தை மாற்றக்கூடியவர் எஸ்பிபி. ஜாலியான பாடல் என்றால் அந்த மூடை தனது குரலிலேயே கொண்டு வந்து விடுவார். சோகப்பாடல் என்றால், குரலிலேயே சோகத்தை காட்டி விடுவார் எஸ்பிபி. பாடலை மேலும் மெருகேற்றுவதில் வல்லவர்.

    நெஞ்சை பிழியும் பாடல்கள்

    நெஞ்சை பிழியும் பாடல்கள்

    கொஞ்சல், கோபம், நக்கல், சவால், சந்தோஷம், துக்கம் என அனைத்தையும் தனது குரலிலேயே கொண்டு வந்துவிடுவார். அப்படி ரஜினி முதல் மோகன் வரை எஸ்பிபி குரலில் சோகத்தை வெளிப்படுத்திய நெஞ்சை பிழியும் பாடல்கள் குறித்த தொகுப்பை காணலாம்.

    உன்னை நெனச்சேன்..

    நடிகர் கமல்ஹாசன் மூன்று வேடத்தில் நடித்த படம் அபூர்வ சகோதரர்கள். இந்தப் படத்தில் குள்ள கமல் காதல் தோல்வியில் பாடும் உன்னை நெனச்சேன் பாட்டு படிச்சேன் பாடல் பெரும் ஹிட்டானது. வாலியின் வரிகளிலும் எஸ்பிபியின் குரலிலும் என்றும் ரசிகர்களின் பிளே லிஸ்ட்டில் இடம் பெறும் இப்பாடல், அப்படியே கமல் பாடுவது போன்று இருக்கும்.

    வானத்தை பார்த்தேன்

    நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான மனிதன் படத்தில் இடம்பெற்ற வானத்தை பார்த்தேன் பூமியை பார்த்தேன் மனிதனை இன்னும் பார்க்கலையே என்ற பாடலை பாடியிருப்பார் எஸ்பிபி. எஸ்பி முத்துராமன் இயக்கத்தில் வெளியானது. இப்படம். இதில் அப்படியே ரஜினி பாடுவது போல் குரலை மாற்றியிருப்பார் எஸ்பிபி.

    ராஜா என்பார்.. மந்திரி என்பார்..

    இதேபோல் ரஜினிகாந்தின் நடிப்பில் வெளியான புவனா ஒரு கேள்வி குறி படத்தில் இடம் பெற்ற ராஜா என்பார் மந்திரி என்பார் ராஜ்ஜியம் இல்லை ஆள என்ற பாடலும் பெரும் ஹிட்டான ஒரு பாடல். இளையராஜா இசையில் மனிதனின் விரக்தியையும் சோகத்தையும் ரஜினிக்காக வெளிப்படுத்தியிருப்பார் எஸ்பிபி.

    உச்சி வகுந்தெடுத்து..

    ரோஜா பூ ரவிக்கைக்காரி படத்தில் நடிகர் சிவகுமாருக்காகவும் ஒரு பாடலை பாடி கலங்க வைத்திருப்பார் எஸ்பிபி. அந்தப் படத்தில் இடம்பெற்ற உச்சி வகுந்தெடுத்து பிச்சிப் பூ வச்சக் கிளி பாடலை ரசிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. சிவக்குமாரே பாடுவது போல் கதறவிட்டிருப்பார் எஸ்பிபி.

    போகுதே.. போகுதே..

    இதேபோல் கடலோர கவிதைகள் படத்தில் இடம் பெற்ற போகுதே போகுதே என் பைங்கிளி வானிலே என்ற பாடலை கண்ணீர் விட வைத்திருப்பார் எஸ்பிபி. ஹீரோயினான ரேகா பிரிந்து செல்லும் போது ஹீரோவான சத்யராஜ் சோகத்தில் பாடும் பாடலாக இந்த பாடல் அமைக்கப்பட்டிருக்கும்.

    குயில புடிச்சு கூண்டில் அடைச்சு

    அடுத்து பிரபு மற்றும் குஷ்பு நடிப்பில் வெளியான சின்னத்தம்பி படத்திலும் சோகப் பாடலை பாடி மனதை வருடியிருப்பார் எஸ்பிபி. நடிகர் பிரபு பாடும் குயில புடிச்சு கூண்டில் அடைச்சு பாட சொல்லுகிற உலகம்... என்ற பாடல் இன்றும் பலர் இரவு நேரத்தில் கேட்கும் பாடலகா உள்ளது.

    காதல் ரோஜாவே..

    அடுத்து எவர் க்ரின் பாடலான காதல் ரோஜாவே.. எங்கே.. நீ எங்கே என்ற பாடல். ரோஜா படத்தில் ஏஆர் ரஹ்மான் இசையில் பலரின் ஃபேவரைட் லிஸ்ட்டில் டாப்பில் இடம்பெற்றிருக்கும் பாடல் இது. வைரமுத்துவின் வரிகளுக்கு தனது குரலில் உயிர் கொடுத்து உருக வைத்திருப்பார் எஸ்பி பாலசுப்ரமணியம்.

    பாடி பறந்த கிளி

    அடுத்து நடிகர் கார்த்தியின் நடிப்பில் வெளியான கிழக்கு வாசல் படத்தில் இடம்பெற்ற பாடி பறந்த கிளி என்ற பாடலை பாடியிருந்தார் எஸ்பிபி. அப்படியே கார்த்தியே பாடுவது போல் பாடியிருப்பார் எஸ்பி பாலசுப்ரமணியம். இந்த பாடலும் பெரும் வெற்றி பெற்ற பாடலாக உள்ளது.

    கூண்டுக்குள்ள என்ன வச்சு..

    அடுத்து சின்னக்கவுண்டர் படத்தில் இடம்பெற்ற கூண்டுக்குள்ள என்ன வச்சு கூடி நின்ன ஊர விட்டு கூண்டுக்குள்ள போனதென்ன ஜோடி கிளியே.. என விஜயகாந்த் சிறையில் இருக்கும் தனது மனைவியை நினைத்து உருகுவதாய் பாடி கலக்கப்படுத்தியிருப்பார் எஸ்பிபி.

    மலையோரம் வீசும் காற்று..

    அடுத்து மோகன் நடிப்பில் வெளியான பாடு நிலாவே படத்தில் இடம்பெற்ற மலையோரம் வீசும் காற்று மனதோடு பாடும் பாட்டு என்ற பாடலை பாடியிருப்பார் எஸ்பிபி. மோகனுக்காக பல பாடல்களை பாடியுள்ளார் எஸ்பிபி, நடிகர் மோகனை மைக் மோகன் என்ற அழைக்க முக்கிய காரணம் எஸ்பிபி என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    SP Balasubramaniyam's top 10 sorrow songs. SPB has sung for Rajinikanth, Kamal, Mohan and many in Tamil Cinema.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X