எஸ்.பி. பாலசுப்ரமணியம் மனைவிக்கும் பரவியது கொரோனா தொற்று.. விரைவில் குணமடைய பிரபலங்கள் பிரார்த்தனை

சென்னை: பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியத்தை தொடர்ந்து அவரது மனைவி சாவித்ரிக்கும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

Recommended Video

பாலு சீக்கிரம் எழுந்து வா! இளையராஜா உருக்கம் • SPB in Hospital | Filmibeat Tamil

எம்.ஜி.எம் மருத்துவமனை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையை தொடர்ந்து எஸ்.பி. பாலசுப்ரமணியம் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மான் என பல திரைத்துறை ஜாம்பவான்களும், ரசிகர்களும் பிரார்த்தனை செய்து ட்வீட்களை பதிவிட்டு வருகின்றனர்.

SP Balasubramanyam wife also got affected by Corona virus

எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை குறித்து சில மோசமான வதந்திகள் பரவிய நிலையில், தனது தந்தையின் உடல் நிலை சீராகவே உள்ளது. அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார். வீண் வதந்திகளை யாரும் பரப்ப வேண்டாம் என அவரது மகன் எஸ்.பி.பி. சரண் நேற்று அறிவித்து இருந்தார்.

எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தைத் தொடர்ந்து அவரது மனைவி சாவித்ரிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அவரையும் மருத்துவர்கள் தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்து வருகின்றனர்.

மிகப்பெரிய இசை ஜாம்பவானான எஸ்.பி. பாலசுப்ரமணியமும் அவரது மனைவியும் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று ரசிகர்களும் பிரபலங்களும் தொடர்ந்து பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X