எஸ்பிபிக்கு கொரோனா நெகட்டிவா? பாஸிட்டிவா? எஸ்பி சரண் பரபரப்பு விளக்கம்!

சென்னை: பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியத்துக்கு கொரோனா டெஸ்ட் நெகட்டிவ் என வெளியான தகவல் குறித்து அவரது மகன் எஸ்பி சரண் விளக்கம் அளித்துள்ளார்.

Recommended Video

SPB பற்றி நீங்கள் அறியாத குழந்தைதனம்

பிரபல பாடகரான எஸ்பி பாலசுப்ரமணியம் கடந்த 5ஆம் தேதி கொரோனா பாதிப்பு காரணமாக சென்னை சூளைமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 13ஆம் தேதி முதல் அவரது உடல்நிலை மோசமடைந்தது. இதனால் ஐசியுவுக்கு மாற்றப்பட்ட எஸ்பி பாலசுப்ரமணியத்திற்கு வெண்டிலேட்டர் மற்றும் எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கனத்துப்போன நெஞ்சம்

கனத்துப்போன நெஞ்சம்

எஸ்பி பாலசுப்ரமணியத்தின் உடல் நிலையில் பின்னடைவு என தகவல் வெளியானது அவரது ரசிகர்களையும் திரைத்துறையினரையும் பெரும் கவலையில் ஆழ்த்தியது. மருத்துவமனையின் அறிக்கையை பார்த்து துக்கப்படதாவர்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு பலரின் மனதும் கனத்துப்போனது.

கூட்டுப் பிரார்த்தனை

கூட்டுப் பிரார்த்தனை

அவர் விரைவில் நலம்பெற வேண்டும் என எண்ணாத நெஞ்சங்களே இல்லை எனும் அளவுக்கு டிவிட்டர், இன்ஸ்டா, ஃபேஸ்புக் என சமூக வலைதளங்களில் பலரும் இயற்கை அன்னையையும் இறைவனையும் வேண்டி வந்தனர். எஸ்பி பாலசுப்ரமணியம் விரைவில் நலமடைந்து வீடு திரும்ப வேண்டும் என கடந்த வியாழக்கிழமை தமிழகம் முழுவதும் எஸ்பிபிக்காக கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்றது.

சரண் வீடியோ

சரண் வீடியோ

இதில் திரைத்துறை பிரபலங்களும் பொதுமக்களும் பங்கேற்றனர். எஸ்பிபியின் உடல் நிலை குறித்து ஒரு பக்கம் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டு வருகிறது. மறுபக்கம் எஸ்பிபியின் மகனான எஸ்பி சரணும் வீடியோ வெளியிட்டு வருகிறார்.

பரவிய தகவல்

பரவிய தகவல்

கடைசியாக வெளியிட்ட வீடியோவில் எஸ்பிபியின் உடல் நிலை சீராக இருப்பதாக எஸ்பி சரண் கூறியிருந்தார். இந்நிலையில் எஸ்பி பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் அவருக்கு கொரோனா டெஸ்ட் நெகட்டிவ் என என்று எஸ்பி சரண் தெரிவித்ததாக தகவல் பரவியது.

எனக்குதான் முதலில் வரும்

எனக்குதான் முதலில் வரும்

இந்நிலையில் இதுகுறித்து வீடியோ வெளியிட்டுள்ள எஸ்பி சரண் விளக்கம் அளித்துள்ளார். நான் காலையில் ஒரு பதிவு போட்டிருந்தேன். அப்பாவின் உடல்நிலை குறித்த தகவல் எனக்குதான் முதலில் வரும். நான் தான் மீடியாவுக்கு தகவல் கூறுவேன்.

உயிர் காக்கும் கருவிகள்

உயிர் காக்கும் கருவிகள்

இன்று காலை முதல் அப்பாவுக்கு கொரோனா நெகட்டிவ் என வதந்தி பரவி வருகிறது. கொரோனா நெகட்டிவ் பாஸிட்டிவ் என்பதை தாண்டி அவரது உடல் நிலை சீராக உள்ளது. அவர் இன்னும் உயிர் காக்கும் கருவிகளுடன் வெண்டிலேட்டர் மற்றும் எக்மோ சிகிச்சையில்தான் உள்ளார்.

மாலை தெரிவிக்கிறேன்

மாலை தெரிவிக்கிறேன்

இந்த ஸ்திரத்தன்மை அவரது நுரையீரலை விரைவில் குணப்படுத்தும் என நம்புகிறோம். இன்று மாலை மருத்துவர்களுடன் கலந்து ஆலோசித்துவிட்டு அப்பாவின் உடல்நிலை குறித்து புதிய அப்டேட்டை தெரிவிக்கிறேன். இவ்வாறு அந்த வீடியோவில் எஸ்பி சரண் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X