90 சதவீத மயக்க நிலையில் இருந்து மீண்டார் எஸ்.பி. பாலசுப்ரமணியம்.. வீடியோ வெளியிட்ட எஸ்.பி.பி சரண்!
சென்னை: பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவரது மகன் எஸ்.பி.பி. சரண் வீடியோ வெளியிட்டுள்ளார்.
Recommended Video
எம்.ஜி.எம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் எஸ்.பி. பாலசுப்ரமணியம் 90 சதவீதம் மயக்க நிலையில் இருந்து மீண்டுள்ளதாக தற்போது வெளியிட்டுள்ள புதிய வீடியோவில் எஸ்.பி.பி. சரண் விளக்கி உள்ளார்.

பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் அபாயக் கட்டத்தை தாண்டியுள்ளதாகவும், விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் என்ற நம்பிக்கையில் அவரது மகன் மற்றும் குடும்பத்தினர் உள்ளனர்.
மருத்துவமனைக்கும் எஸ்.பி. பாலசுப்ரமணியத்துக்காக பிரார்த்தனை பண்ண மக்களுக்கும் தனது நன்றியை தெரிவித்துள்ளார் எஸ்.பி.பி. சரண்.
அப்பாவின் உடல் நிலை குறித்த தகவலை ஆங்கிலத்தில் கூறுவது எதற்காக என்றால், உலகம் முழுவதும் அப்பாவுக்கு ரசிகர்கள் உள்ளனர். அனைவருக்கும் பொதுவான மொழியில் இந்த அறிக்கையை சொல்கிறேன். தனியாக தமிழில் கூறவில்லை, தெலுங்கில் கூறவில்லை என யாரும் கோபம் கொள்ள வேண்டாம் என்றும் கூறியுள்ளார்.
எஸ்.பி. பாலசுப்ரமணியம் கொரோனா சிகிச்சையில் இருந்து குணமாகி அவர் மீண்டும் எழுந்து வந்து பாட வேண்டும் என ஒட்டுமொத்த திரை பிரபலங்களும், ரசிகர்களும் சமீபத்தில் கூட்டுப் பிரார்த்தனை செய்தது குறிப்பிடத்தக்கது.
எஸ்.பி. பாலசுப்ரமணியத்துக்கு கொரொனா போய்விட்டது என்ற வதந்தியை நம்ப வேண்டாம் என்றும், அவரது உடல் நிலை குறித்த அறிவிப்புகளை தானே சொல்கிறேன் என்றும் எஸ்.பி.பி. சரண் தெளிவுபடுத்தி இருப்பது வீண் வதந்திகளை தடுக்க வழிவகுத்து வருகிறது.


Click it and Unblock the Notifications











