அஜித் இரங்கல் தெரிவித்தாரா இல்லையா என்பது இப்போது அவசியமா? பிரஸ்மீட்டில் கடுப்பான எஸ்பி சரண்!

சென்னை: அஜித் இரங்கல் தெரிவித்தாரா இல்லையா என்பதுதான் இப்போது முக்கியமா என எஸ்பிபி சரண் காட்டமாக செய்தியாளர்களிடம் கேள்வி எழுப்பினார்.

உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த பிரபல பாடகரான எஸ்பி பாலசுப்ரமணியம் கடந்த வெள்ளிக்கிழமை காலமானார். அவரது மறைவு இசை ரசிகர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எஸ்பிபியின் மரணத்தால் ஏற்பட்ட அதிர்ச்சியில் இருந்தே இன்னும் பலரும் மீளாமல் உள்ளனர். எஸ்பிபியின் மறைவுக்கு திரைத்துறை மற்றும் அரசியல் சார்ந்த பலரும் இரங்கல் தெரிவித்தனர்.

அஞ்சலி செலுத்தாத அஜித்

அஞ்சலி செலுத்தாத அஜித்

பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரரான எஸ்பிபிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் எஸ்பிபியின் சிபாரிசால் சினிமாவுக்கு அறிமுகமான நடிகர் அஜித், எஸ்பிபியின் மறைவுக்கு இரங்கல் அறிக்கையும் வெளியிடவில்லை, நேரிலும் அஞ்சலி செலுத்த வரவில்லை.

அஜித் மீது விமர்சனம்

அஜித் மீது விமர்சனம்

எஸ்பி பாலசுப்ரமணியம் மற்றும் எஸ்பி சரணுக்கு நெருங்கிய நண்பரான அஜித் அவர்களை போனில் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினாரா என்ற தகவலும் இல்லை. இதனால் சமூக வலைதளங்களில் பலரும் நடிகர் அஜித்தை கடுமையாக விளாசி வருகின்றனர்.

சரணிடம் கேள்வி

சரணிடம் கேள்வி

இந்நிலையில் எஸ்பிபியின் மருத்துவ சிகிச்சை கட்டணம் தொடர்பாக எழுந்த சர்ச்சை குறித்து அவரது மகனான எஸ்பி சரண் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அஜித் இரங்கல் தெரிவிக்காதது குறித்து செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர்.

என்ன பிரச்சனை?

என்ன பிரச்சனை?

அதற்கு பதிலளித்த எஸ்பி சரண், ஆம் அஜித் எங்கள் நண்பர், எங்கள் குடும்ப நண்பர் - ஆனால் அவர் இரங்கல் தெரிவித்தாரா இல்லையா? அவர் ஒரு அறிக்கையை வெளியிட்டாலோ அல்லது பகிர்ந்து கொள்ளாவிட்டாலோ என்ன? அவர் தனது வீட்டிலிருந்து இரங்கல் தெரிவிக்கட்டும். அவர் பேசினாலும் இல்லாவிட்டாலும், அவர் என்னை அழைத்தாலும் இல்லாவிட்டாலும், என்ன பிரச்சனை? என் அப்பா போய்விட்டார், எஸ்.பி.பாலசுப்ரமண்யம் காலமானார்.

அம்மாவை பார்த்துக்கொள்வதா?

அம்மாவை பார்த்துக்கொள்வதா?

துக்கப்படுவதற்கு எங்களுக்கு நேரம் தேவை. என்னிடம் இதுபோன்ற பல்வேறு வதந்திகள் குறித்து தெளிவு கேட்க வேண்டாம். நான் உங்களின் கேள்விகளை தெளிவுபடுத்த வேண்டுமா அல்லது என் அம்மாவை கவனித்துக் கொள்ள வேண்டுமா? தயவு செய்து உங்கள் அனைவரையும் வேண்டி கேட்டுக்கொள்கிறேன் என கூறினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X