மருத்துவரும் முன்னணி தயாரிப்பாளருமான எஸ். பி. சௌத்ரி வாக்கு அளித்தார்!

சென்னை: நேற்று நாடு முழுவதும் மக்கள் அனைவரும் தனது ஜனநாயக கடமையை செய்தனர்.

Recommended Video

Tamil Cinema Celebrities Vote | TN Election 2021 | Oneindia Tamil

திரையுலக பிரபலங்கள் உட்பட பலர் நேற்று காத்திருந்து வாக்கு அளித்த செய்திகள் பரவலாக வெளிவந்தன.

குழந்தைகள் நல மருத்துவரும், முன்னணி தயாரிப்பாளருமான எஸ். பி. சௌத்ரி ஈரோடு மேற்கு தொகுதியில் தனது வாக்கை பதிவு செய்தார்.

டகால்டி தயாரிப்பாளர்

டகால்டி தயாரிப்பாளர்

குழந்தைகள் நல மருத்துவரான எஸ். பி. சௌத்ரி சினிமா மீது கொண்ட ஆர்வம் காரணமாக படங்களை தயாரிக்க தொடங்கியுள்ளார். கடந்த வருடம் சந்தானம் நடிப்பில் வெளிவந்த டகால்டி படத்தை எஸ். பி. சௌத்ரி தயாரித்திருந்தார்.

யோகிபாபுவுடன் கூட்டணி

யோகிபாபுவுடன் கூட்டணி

இதைத்தொடர்ந்து எஸ். பி. சௌத்ரி மீண்டும் சந்தானம் நடிக்கும் படத்தை தயாரிக்க உள்ளதாக தெரிகிறது. நடிகர் யோகிபாபு நடிக்கவுள்ள படத்தையும் தயாரிக்கவுள்ளார். இது மட்டுமின்றி சசிகுமார் நடிக்கவுள்ள படத்தையும் தயாரிக்கவுள்ளாராம்.

ஐஸ்வர்யா ராஜேஷ்

ஐஸ்வர்யா ராஜேஷ்

சந்தானம், யோகி பாபு, சசிகுமார் படங்கள் ஒருபுறம் இருக்க ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் டிரைவர் ஜமுனா படத்தை தயாரிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஜனவரி 10ம் தேதி வெளியிட்டார் எஸ். பி. சௌத்ரி. இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் கேப் (cab) டிரைவராக நடிக்கவுள்ளார்.

அறிவிப்புகள் வெளிவரவுள்ளன

அறிவிப்புகள் வெளிவரவுள்ளன

டிரைவர் ஜமுனா படத்தின் நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ் & படத்தின் தயாரிப்பாளர் எஸ். பி. சௌத்ரி ஆகியோர் வாக்கு செலுத்தியுள்ளனர். மேலும் இவர்கள் இணைந்துள்ள டிரைவர் ஜமுனா படத்தின் பூஜை குறித்த அறிவிப்புகள் கூடிய விரைவில் வெளிவரவுள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X