Don't Miss!
- News
"மைனஸ் 34 டிகிரி.." எலும்பை உறைய வைக்கும் குளிர்.. துடிக்கும் குழந்தைகள்.. ஆப்கனில் 162 பேர் பலி!
- Finance
எப்போ வேணாலும் அறிவிக்கலாம்.. பாகிஸ்தான் நிலை ரொம்ப மோசம்..!
- Lifestyle
உங்க பிறந்த தேதி 6,15 மற்றும் 24 இதுல ஒன்னா? அப்ப உங்க எதிர்காலம் எப்படி இருக்கப்போகுது தெரியுமா?
- Automobiles
இது இருக்குற வரைக்கும் மாருதியை அசைக்க முடியாது! காசை கொடுத்துவிட்டு காருக்காக தவம் கிடக்கும் 4.05 லட்சம் பேர்
- Technology
iPhone 15 சீரீஸ்: மொத்தம் 4 மாடல்கள்.. அனைத்திலுமே "இந்த" அம்சம் இருக்கும்.. என்னது அது?
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Sports
என்ன தெரிகிறது அங்கு??.. போட்டியின் போது அம்பயர் எராஸ்மஸ் செய்த காரியம்.. இணையத்தில் சிரிப்பலை!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
“பாயும் ஒளி நீ எனக்கு ” படத்தின் முழு திரையரங்கு, திரையரங்கு அல்லாத உரிமைகளை பெற்றது SP சினிமாஸ்
SP சினிமாஸ் தமிழ்த் திரையுலகில் தனித்துவமான மற்றும் பொழுதுபோக்கு உள்ளடக்கங்களைக் கொண்ட திரைப்படங்களைத் தயாரிப்பதில் முன்னோடியாக இருந்து வருகிறது. நல்ல தரமான திரைப்படங்களைத் தயாரித்து வெளியிடுவதில் முழு ஈடுபாட்டுடன் இருக்கும் தயாரிப்பு நிறுவனம் SP சினிமாஸ். அந்த வகையில் தான் விக்ரம் பிரபுவின் நடிப்பில் அடுத்து வரவிருக்கும் திரைப்படமான "பாயும் ஒளி நீ எனக்கு " திரைப்படத்தை SP சினிமாஸ் தேர்ந்தெடுத்துள்ளது, மேலும் அதை இந்தியா மற்றும் உலகம் முழுவதும் வெளியிடவுள்ளது. இப்படம் தமிழ், கன்னடம் மற்றும் தெலுங்கில் வெளியாகவுள்ளது.
கார்த்திக் அத்வைத் இந்த படத்தின் மூலம் தமிழில் இயக்குனராக அறிமுகமாகிறார். அதோடு, தனது தயாரிப்பு நிறுவனமான கார்த்திக் மூவி ஹவுஸுக்காக இந்தப் படத்தை எழுதி, இயக்கி, தயாரித்துள்ளார். கார்த்திக் அத்வைத் நியூயார்க் ஃபிலிம் அகாடமியின் முன்னாள் மாணவர். தனது பட்டப்படிப்பிற்குப் பிறகு, இயக்குனர் ராஜமௌலி அவர்களுடன் தொடர்ந்து பயணித்த புகழ்பெற்ற மூத்த எடிட்டரான கோத்தகிரி வெங்கடேஸ்வர ராவ் அவர்களின் கீழ் கார்த்திக் பணியாற்றினார். கார்த்திக் பல விளம்பரப் படங்களை இயக்கியுள்ளார், மேலும் அவரது அடுத்த படம் கன்னட சூப்பர் ஸ்டார் டாக்டர்.சிவராஜ் குமாருடன் அமையவிருக்கிறது. சிவராஜ் குமார், தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் ஜெயிலர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடதக்கது.

பிரமாதமாக வழங்கப்பட்ட இந்த படத்தின் ஆக்ஷன் டீஸர், அதன் நேர்த்தியான காட்சிகள் மற்றும் படத்தொகுப்புகள், அட்டகாசமான இசை மற்றும் விக்ரம் பிரபுவின் சிறந்த திரை ஈர்ப்பு ஆகியவை , படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏற்கனவே உயர்த்தியுள்ளது.
கன்னட திரைதுறையின் பிரபலமான நடிகர் டாலி தனஞ்சயா இந்த படத்தில் வில்லனாக நடிக்கிறார். அவரது அதிரடி காட்சிகள் படத்தை அடுத்த கட்டத்திற்கு உயர்த்தும் வகையில் அமைந்துள்ளன . வாணி போஜன் கதாநாயகியாக நடிக்கிறார், மேலும் இந்த படத்தில் ஆனந்த், விவேக் பிரசன்னா, வேல ராமமூர்த்தி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.