விஜய்சேதுபதியின் 'லாபம்' பர்ஸ்ட் லுக்கில் இவ்வளவு கதை இருக்கா? விரிவாக விளக்கிய இயக்குனர் ஜனநாதன்
சென்னை: விஜய் சேதுபதி நடிக்கும் 'லாபம்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சென்னையில் நேற்று வெளியிடப்பட்டது.
எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, ஸ்ருதிஹாசன், சாய் தன்ஷிகா உட்பட பலர் நடிக்கும் படம், 'லாபம்'.
ராம்ஜி ஒளிப்பதிவு செய்கிறார். டி.இமான் இசை அமைக்கிறார். இதன், பர்ஸ்ட்லுக் போஸ்டர் சென்னையில் நடந்த விழா ஒன்றில் நேற்று வெளியிடப்பட்டது.

ஏர்கலப்பை
அந்த போஸ்டரில், ஏர்கலப்பை, குழந்தையுடன் போராடும் பெண், ஆவேசமாக கோஷம் போடும் மாடர்ன் இளைஞி, கையில் துப்பாக்கியுடன் குறிபார்க்கும் போலீஸ்... இவர்களுக்கு நடுவில் ஒரு கையில் மைக்கும் ஒரு தோளில் ஒலிப்பெருக்கியுமாகக் குரல் எழுப்பிக் கொண்டிருக்கிறார் விஜய் சேதுபதி.

குடிமக்களே
மேலே 'குடிமக்களே...' என்று விஜய் சேதுபதி அழைப்பது போல ஓர் வாசகம் ஆகியவை இடம்பெற்றுள்ளது. இந்த போஸ்டர் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இயக்குனர் ஜனநாதன்
விவசாயத்தையும் விவசாயிகளின் நிலை பற்றியும் பேசும் இந்தப் படத்தின் போஸ்டர் பற்றி இயக்குனர் ஜனநாதனிடம் நிகழ்ச்சி தொகுப்பாளர் சதீஷ், இதுல என்ன சார் சொல்ல வர்றீங்க? என்று கேட்டார்.

அரச பயங்கரவாதம்
அப்போது, ஜனநாதன் கூறும்போது, உலகம் முழுவதும் அரச பயங்கரவாதத்துக்கு எதிராக மக்கள் போராடி வந்திருக்கிறார்கள். குண்டடிப் பட்டு செத்துதான் இந்தப் பலனை நாம் அனுபவத்துக் கொண்டிருக்கிறோம். அதைத்தான் இந்த சிலைகள் உணர்த்துகின்றன.

துப்பாக்கியால்
'குடிமக்களே...' என்ற வாசகம், 'துப்பாக்கியால் சுடுபவனும் குடிமகன்தான். சுடப்பட்டு வீழ்பவனும் குடிமகன்தான்' என்பதைச் சொல்கிறது. இதுதான் இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரில் இருக்கிறது.

ஒரே காட்சி வடிவம்
இந்தச் சிலைகளை வடிவமைத்தவர், பிரபல ஓவியர் சந்துரு. உலகத்தின் முக்கியமான ஓவியர். சினிமாவுக்காக அவர் வடிவமைத்த ஒரே காட்சி வடிவம் இதுவாகத்தான் இருக்கும்' என்றார்.
ஒரு பர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு பின்னால இவ்வளவு கதை இருக்கா? என்று ஆச்சரியமாக பேசிக்கொள்கின்றனர் ரசிகர்கள்.


Click it and Unblock the Notifications











