அரசியல் பொருளாதார பாடம் நடத்திய எஸ்.பி. ஜனநாதன்.. அவரது மறைவால் வைரலாகும் பேராண்மை சீன்!

சென்னை: லாபத்துக்காக படங்களை இயக்காமல் கொண்ட லட்சியத்திற்காக படங்களை இயக்கிய எஸ்.பி. ஜனநாதன் மறைவு திரைத் துறையினருக்கு மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தி உள்ளது.

எஸ்.பி. ஜனநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான பேராண்மை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

இயக்குநர் எஸ்.பி. ஜனநாதன் மறைவால் சோகத்தில் வாடி வரும் ரசிகர்கள் பேராண்மை படத்தில் நடிகர் ஜெயம் ரவி என்.சி.சி மாணவிகளுக்கு நடத்தும் அரசியல் பொருளாதாரம் குறித்த காட்சியை வைரலாக்கி வருகின்றனர்.

எஸ்.பி. ஜனநாதன் மறைவு

எஸ்.பி. ஜனநாதன் மறைவு

உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இயக்குநர் எஸ்.பி. ஜனநாதன் இன்று (மார்ச் 14) காலை மாரடைப்பு காரணமாக காலமானார். இயக்குநர் இமயம் பாரதிராஜா, ஜெயம் ரவி, விஜய்சேதுபதி, அமீர், வெங்கட் பிரபு, சாந்தனு உள்ளிட்ட ஏராளமான சினிமா பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அரசியல் பொருளாதாரம்

என்.சி.சி மாணவிகளுக்கு பயிற்சி கொடுக்கும் ஆசிரியர் துருவனாக பேராண்மை படத்தில் ஜெயம் ரவி நடித்திருப்பார். மாணவிகளுக்கு அரசியல் பொருளாதாரம் பற்றி ஜெயம் ரவி வகுப்பெடுக்கும் காட்சியை தற்போது ரசிகர்கள் வைரலாக ஷேர் செய்து இயக்குநர் எஸ்.பி. ஜனநாதனை நினைத்து உருகி வருகின்றனர்.

கமாடிட்டி டு கமாடிட்டி

கமாடிட்டி டு கமாடிட்டி

பண பரிவர்த்தனை இந்த உலகத்தில் இல்லாத போது அனைவரும் சமமாக இருந்ததாகவும், ஒருவரிடம் உள்ள ஒரு பொருளை கொடுத்து இல்லாத பொருளை மற்றவரிடம் வாங்கும் முறைதான் இருந்தது. கமாடிட்டி டு கமாடிட்டு அதாவது உப்பு கொடுத்து சர்க்கரை வாங்குவது அல்லது மிளகாய் கொடுத்து அவங்களுக்கு தேவையான அரிசியோ பருப்பையோ வாங்கிட்டாங்க என ஜெயம் ரவி பாடத்தை ஆரம்பிப்பார்.பண பரிவர்த்தனை இந்த உலகத்தில் இல்லாத போது அனைவரும் சமமாக இருந்ததாகவும், ஒருவரிடம் உள்ள ஒரு பொருளை கொடுத்து இல்லாத பொருளை மற்றவரிடம் வாங்கும் முறைதான் இருந்தது. கமாடிட்டி டு கமாடிட்டு அதாவது உப்பு கொடுத்து சர்க்கரை வாங்குவது அல்லது மிளகாய் கொடுத்து அவங்களுக்கு தேவையான அரிசியோ பருப்பையோ வாங்கிட்டாங்க என ஜெயம் ரவி பாடத்தை ஆரம்பிப்பார்.

பணம் ஏற்படுத்திய பிரச்சனை

பணம் ஏற்படுத்திய பிரச்சனை

பண்டமாற்று முறை கடினமாக இருந்ததால் பணம் என்ற ஒன்றை உருவாக்கினார்கள். பணத்தை கொடுத்து சரக்கு வாங்கிக் கொண்டு காலம் ஓட, அதற்கடுத்து பணத்தை பதுக்க ஆரம்பித்தனர். அப்படித் தான் சர்ப்பிளஸ் மணி எனும் உபரி பணம் அதிகமானது. உழைக்கும் வர்க்கம் உழைத்துக் கொண்டே இருக்க, பணத்தை பதுக்கியவர்கள் முதலாளிகளாக மாறி உல்லாசமாக வாழ ஆரம்பித்தனர் எனும் பாடத்தை மாணவிகளுக்கு சொல்வது போல காட்சியை அமைத்து மக்களுக்கு புரிய வைத்தவர் எஸ்.பி. ஜனநாதன்.

லாபம் படத்திலும்

பேராண்மை படத்தில் ஒரு காட்சியில் இடம்பெற்ற அரசியல் பொருளாதாரத்தை பற்றியே முழு படமாக லாபம் படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குநர் ஜனநாதன். விஜய்சேதுபதி, ஸ்ருதிஹாசன் நடிப்பில் உருவாகி உள்ள அந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி லாபம் படத்தின் கருவை உணர்த்தியது.

ஈடு செய்ய முடியாத இழப்பு

ஈடு செய்ய முடியாத இழப்பு

தொழிற்சாலைகள் இயங்கினால் தான் விவசாயம் பண்ண முடியும் என நம்ப வைத்து விட்டனர் என்றும், விவசாயம் பண்ணினால் தான் நம் நாடு முன்னேறும் என்ற கருத்தையும் லாபம் படத்தில் விதைத்துள்ளார். இது போல ஏகப்பட்ட சித்தாந்த படங்களை கொடுக்க வேண்டிய இயக்குநர் அதற்குள் இயற்கை எய்தியது ஈடு செய்ய முடியாத இழப்பு.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X