அண்ணன் இறந்த 2 நாட்களில் தங்கையும் மரணம்.. இயக்குநர் எஸ்பி ஜனநாதன் வீட்டில் அரங்கேறிய சோகம்!
சென்னை: இயக்குநர் எஸ்பி ஜனநாதனின் சகோதரி மாரடைப்பால் மரணமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழில் இயற்கை, ஈ, பேராண்மை, புறம்போக்கு என்கிற பொதுவுடமை ஆகிய படங்களை இயக்கியவர் எஸ்பி ஜனநாதன்.
கடைசியாக விஜய் சேதுபதி மற்றும் ஸ்ருதி ஹாசனை வைத்து லாபம் படத்தை இயக்கினார்.

திடீர் உடல்நலக்குறைவு
இந்தப் படம் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. இந்நிலையில் இந்தப் படத்தின் எடிட்டிங் பணியில் ஈடுபட்டிருந்த எஸ்பி ஜனநாதன் கடந்த வியாழக்கிழமை திடீர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார்.

ஞாயிற்றுக்கிழமை காலமானார்
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டதாக கூறப்பட்டது. இதனை தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக் கிழமை சிகிச்சைப் பலனின்றி எஸ்பி ஜனநாதன் காலமானார்.

பெரும் அதிர்ச்சி
எஸ்பி ஜனநாதனின் மரணம் திரைத்துறையினரையும் ரசிகர்களையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. எஸ்பி ஜனநாதனின் மறைவுக்கு திரைத்துறையினரும் அரசியல் கட்சியினரும் மற்றும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்தனர்.

மற்றொரு சோகம்
உறவினர்களும் அவரது உடல் கடந்த திங்கள் கிழமை இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டு சென்னை மயிலாப்பூரில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. இந்நிலையில் அவர் இறந்த இரண்டே நாட்களில் அவரது வீட்டில் மற்றொரு சோகம் அரங்கேறியுள்ளது.

சகோதரி மரணம்
அதாவது அண்ணன் இறந்த சோகத்தில் அவரது தங்கை லக்ஷ்மி அடுத்த இரண்டு நாட்களில் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார். இந்த சம்பவம் திரைத்துறையினர் மத்தியிலும் அவரது குடும்பத்தினர் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











