ரஜினி எப்படி இந்த அளவுக்கு பெரிய ஆள் ஆனார்?: ரகசியம் சொன்ன பிரபல இயக்குனர்
Recommended Video

சென்னை: ரஜினிகாந்த் எப்படி பெரிய ஆள் ஆனார் என்று இயக்குனர் எஸ்.பி. முத்துராமன் தெரிவித்துள்ளார்.
இன்று பிறந்தநாள் கொண்டாடும் ரஜினிகாந்துக்கு பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ரஜினியை வைத்து 25 படங்கள் எடுத்த இயக்குனர் எஸ்.பி. முத்தராமன் பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.
அந்த பேட்டியில் அவர் ரஜினி பற்றி கூறியிருப்பதாவது,

ரஜினி
நான் 70 படங்களை இயக்கியுள்ளேன். அதில் 25 படங்கள் ரஜினியை வைத்து எடுத்தேன். எனக்கு ரஜினியை 50 ஆண்டுகளுக்கும் மேலாக தெரியும். புகழ், பணம், அதிகாரம் என்று எது வந்த பிறகும் ரஜினி மாறவில்லை. அவர் என்னை ஒரு சகோதரராக பார்க்கிறார். அவர் தொட்டது எல்லாம் வெற்றி பெறும். அவருடன் இருக்கும் போது ஒரு சூப்பர் ஸ்டாருடன் இருக்கிறோம் என்றே தோனாது.

கருத்து வேறுபாடு
ஆறில் இருந்து அறுபது வரை வரை படத்தில் பல கஷ்டங்களை அனுபவித்த நபராக ரஜினி நடித்திருந்தார். அந்த படப்பிடிப்பின் போது ரஜினிக்கும் எனக்கும் இடையே தினமும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அப்பொழுது பஞ்சு அருணாச்சலம் தலையிட்டு நீ முத்தராமன் சொல்றத கேளேன் என்று ரஜினியிடம் கூறுவார். படத்தை பார்த்த பிறகு ரஜினி என்னை கட்டித் தழுவி இது தனது கெரியரில் முக்கியமான படமாகும் என்றார்.

ஸ்டைல்
ஒரு ஹீரோ இப்படித் தான் இருக்க வேண்டும் என்று இருந்த மக்களின் எண்ணத்தை மாற்றினார் ரஜினி. அவர் சிவப்பு கிடையாது, உயரம் கிடையாது. ஆனால் வசனம் பேசுவதாக இருந்தாலும் சரி, சிகரெட்டை தூக்கிப் போட்டு பிடிப்பதாக இருந்தாலும் சரி அனைத்திலும் தனக்கு என்று ஒரு ஸ்டைலை உருவாக்கினார்.

ரஜினிகாந்த்
ரஜினிகாந்த் இன்று ரஜினிகாந்தாக இருப்பதற்கு காரணம் அவர் யாரையும் காப்பியடிக்கவில்லை. அவர் அவராகவே இருப்பதால் இந்த அளவுக்கு பெரிய ஆளாகியுள்ளார். 70களில் அவர் தமிழ் சினிமாவின் ஸ்டைலான வில்லன், சூப்பர் ஸ்டார் அல்ல. ஆரம்ப காலத்தில் தமிழ் வசனங்களை பேச சிரமப்பட்ட ரஜினி தற்போது பன்ச் வசனங்களை எவ்வளவு அழகாக பேுசுகிறார். எதை செய்தாலும் ஈடுபாட்டுடன் செய்வார்.

நடிப்பு
ரஜினி கேமராவுக்கு முன்பு மட்டுமே நடிப்பார். 30 ஆண்டுகளுக்கு முன்பு கேரவன் எல்லாம் இல்லை. ஆனால் அது குறித்து ரஜினி குறை கூறியதே இல்லை. மேக்கப் போட, உடை மாற்ற தனி அறை எல்லாம் அவர் கேட்க மாட்டார். தங்கமான மனுஷன். அவர் தயாரிப்பாளர்களை மதிப்பவர். படத்தில் தனக்கு தான் அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று அவர் எதிர்பார்க்க மாட்டார் என்கிறார் எஸ்.பி. முத்துராமன்.


Click it and Unblock the Notifications











